Tuesday, March 19, 2024
Home » தனது ‘Adopt A Beach’ திட்டத்தை மூன்றாவது ஆண்டாகவும் முன்னெடுத்துள்ள Coca-Cola

தனது ‘Adopt A Beach’ திட்டத்தை மூன்றாவது ஆண்டாகவும் முன்னெடுத்துள்ள Coca-Cola

by mahesh
October 4, 2023 6:31 am 0 comment

சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினத்தை இளம் ஊடகத்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுடனும் இணைந்து கொண்டாடியது Coca-Cola Sri Lanka நிறுவனம், தனது Adopt A Beach திட்டத்தை மூன்றாவது ஆண்டாக இம்முறையும் முன்னெடுத்து, இலங்கையின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் தனது பணியைத் தொடர்கிறது. இந்த உற்சாகமூட்டும் நடவடிக்கை, 2023 செப்டம்பர் 16 ஆம் திகதி சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாடுவதோடு, கடற்கரை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Coca-Cola Sri Lanka நிறுவனம் மற்றும் Clean Ocean Force இடையேயான ஒத்துழைப்பைக் கொண்டாடும் வகையில், மட்டக்குளி Crow Island கடற்கரையில் பிரத்யேக கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநரும் இலங்கை விமானப்படையின் தளபதியுமான கௌரவ ரொஷான் குணதிலக்க மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பிறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு, கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், கழிவு நிர்வகிப்பு அதிகார சபை மற்றும் Crow Island கடற்கரை முகாமையாளர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும், நமது நாட்டின் இளைஞர்கள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கடற்கரைப் பகுதிகளை உருவாக்குவதில் வகிக்கும் முக்கியப் பங்கை வலியுறுத்தும் விதமாக, இந்த நிகழ்வில் ஊடகத் துறையைச் சேர்ந்த இளம் திறமையாளர்கள் மற்றும் Clean Ocean Force, Clean Ocean Force Youth Club of the Ocean’s University, Clean Ocean Force Youth Club in Negombo, Rotaract Club Colombo Regent, Shri Vimukthi Youth Association, International Schools மற்றும் Adfactors Public Relations Lanka ஆகியவற்றைச் சேர்ந்த இளம் தன்னார்வலர்கள் அணி ஆகியோரும் கலந்து கொண்டனர். Adopt A Beach திட்டம், Clean Ocean Force (COF) என்ற இலாப நோக்கற்ற அமைப்புடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இது இலங்கையின் கடற்கரை சுத்தம் செய்யும் முயற்சிகளில் புதிய அளவுகோல்களை நிறுவியுள்ளது. Coca-Cola Sri Lanka நிறுவனம், Crow Island கடற்கரையை சுத்தம் செய்து பராமரிப்பதற்கான COF-ன் முயற்சிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT