வரண்ட காலநிலை மாறும் வாய்ப்பு; பிற்பகலில் மழை | தினகரன்

வரண்ட காலநிலை மாறும் வாய்ப்பு; பிற்பகலில் மழை

 
தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வரண்ட காலநிலை மாற்றமடையும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
அந்த வகையில் வட மாகாணம் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளில், குறிப்பாக மேல், சப்ரகமுவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மழையின்போது, தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும், இடி, மின்னல் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதாலும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 

Add new comment

Or log in with...