ரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூாில் ஆா்ப்பாட்டம் | தினகரன்


ரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூாில் ஆா்ப்பாட்டம்

 
கலைஞா்களை கலைஞா்களாக பாருங்கள் அவா்களை அரசியல் வாதிகளாக பாா்க்கதீா்கள் என நல்லூாில் ஆா்ப்பாட்டம் ஒன்று இன்று (27) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

ஈழத்துக் கலைஞா்கள் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட சிலாினால் இந்த ஆா்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரபல தென்னிந்திய நடிகா் சூப்பர் ஸ்ராா் ரஜனிகாந் எதிா்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த நிலையில் தென்னிந்திய அரசியல்வாதிகளின் கடும் எதிா்ப்பின் காரணமாக ரஜனிகாந்தின் வரவு அவராலேயே நிறுத்தப்பட்டது.
 
இதற்கு எதிா்ப்புத் தொிவித்தே மேற்படி ஆா்ப்பாட்டக்காரா்களால் இந்த ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
 
“திருமாவளவன், வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்” என்ற தலைப்பில் மேற்படி ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
 
 
 
 
இதன்போது திருமாவளவா..., வேல்முருகா...ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே,சுயநலவாதிகளே ஈழத்தமிழனின் விடயத்தில் தலையிடாதே,கலைஞா்களை கலைஞா்களாக வாழவிடு,எமது தலைவன் எம்மைக் காண்பதை தடுக்க நீங்கள் யார்?,மஹிந்தாவுக்கு கரம்கொடுத்த உங்களுக்கு தலைவனைத் தடுக்க என்ன தகுதி? போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
 
 
 
 
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
 
 
 

Add new comment

Or log in with...