பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி விபத்து | தினகரன்

பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி விபத்து

 
யாழ்ப்பாணம் சாவகச்சேரி தச்சன் தோப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி  ரயிலுடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கொழும்பிலிருந்து யாழிற்கு சென்ற கடுகதி ரயிலுடன் குறித்த முச்சக்கரவண்டி இன்று (22)  மதியம் மோதியது.
 
 
இதன் போது சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
 

Add new comment

Or log in with...