everjobs.lk காகிதமற்ற வேலைவாய்ப்பு வலையமைப்பு | தினகரன்

everjobs.lk காகிதமற்ற வேலைவாய்ப்பு வலையமைப்பு

(Sathi Jayawardene - Marketing & PR Manager, Daniel Topolanek - Head of Business Development, Rushabh Sheth - Managing Director)
 
புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்தி, இலங்கையில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பிரசித்தி பெற்ற வலையமைப்பு everjobs.lk  ஆகும். இது, இலங்கையில் முதன் முதலாக, முன்னணி தொழில் வாய்ப்புக்களை, காகிதப் பரிமாற்றங்கள் அற்ற முறையில், இணையத்தளத்தில் Online மூலம் பெற்றுத் தருகிறது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹொட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது பற்றிய தகவல்களை நிறுவனம் வெளியிட்டிருந்தது.
 
 
 
காகிதப் பரிமாற்றங்கள் அற்ற முறையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும், இலங்கையில் முதல் முறையாக இடம்பெறும் நிகழ்வு, தொழில் தேடுவோருக்கு நவீன முறையில் வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை வழங்குகிறது. தங்களது சுயவிபரக் கோவைகளை, நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று கையளிப்பதற்குப் பதிலாக, ஒன்லைன் மூலம் everjobs.lk  கணக்கின் ஊடாக நேரடியாக விண்ணப்பிக்க முடியும். இந்தச் செயற்பாடுகளுக்கு ஒரு நிமிடத்திற்கும் குறைந்த கால விரையமே ஏற்படக் கூடும். விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் நிறுவனங்களுக்கு முகாமைப்படுத்தி, நேர்முகப் பரீட்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும் முடியும். தொழில் தேடுவோர் அந்தந்த நிறுவனத்திற்கான QR Code இனை ஸ்கான் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மே மாதம் 6 மற்றும் 07 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. சுமார் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 
2016 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தனித்தனி பார்வையாளர்களைக் கவர்ந்த everjobs.lk, இரண்டு இலட்சம் விண்ணப்பங்களை முகாமைத்துவப்படுத்தி இரண்டு வருடங்களில் இலங்கையில் தொழில் வழங்கும் இணையத்தளங்களில் முன்னணிக்கு வர முடிந்துள்ளது. சந்தையில் Everjobs வெளிவந்த காலம் முதல், சுமார் 500 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில் வாய்ப்புக்களைப் பிரசுரிக்கும் மற்றும் ஆலோசனை தளமாக Everjobs யை தெரிவு செய்துள்ளன. APACIG, Company Builder, Rocket Internet  மற்றும் Ooredoo ஆகிய நிறுவனங்கள் இணைந்த வகையில் உருவான everjobs.lk விற்கு அடித்தளமாக அமைந்துள்ளன. 
 
 
everjobs.lk யின் முகாமைத்துவ பணிப்பாளர் ருசாவ் செத் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் முதல் முறையாக, காகிதப் பரிமாற்றங்கள் அற்ற முறையில், வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வுகள் பற்றி அறிவிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தள பாவனை ஆகிய துறைகளில் இலங்கை துரிதமாக முன்னணிக்கு வந்துள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. அது எமக்கு ஊக்குவிப்பை வழங்குவதாக உள்ளது. இதன் பங்காளிகளாக திகழும் தொழில் தேடுவோரை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெறுமதி சேர்க்கும் நபர்களாக மாற்றவும் உதவுகிறது. இதனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல மே மாதத்தில் இடம்பெறவுள்ள எமது காகிதமற்ற வேலைவாய்ப்பு வழங்கல் நிகழ்வில் நாம் எதிர்பார்க்கின்றோம்” என்று கூறினார்.
 
 

Add new comment

Or log in with...