நீருக்கான யுத்தம் தொலைவில் இல்லை! | தினகரன்

நீருக்கான யுத்தம் தொலைவில் இல்லை!

 

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ ணீ‌ர் வரட்‌சி‌யு‌ம் ஆர‌ ம்‌பி‌த்து ‌வி‌டு‌கிறது. உலகில் வாழ்கின்ற எல்லா உயிரினங்களின் வாழ்விற்கும் மூலாதாரமாக நீர் உள்ளது. இயற்கைக் கொடைகளில் ஒன்றாக நீர் உள்ளது

கைத்தொழில் புரட்சியின் வேகம், விஞ்ஞான வளர்ச்சி போன்ற பல காரணங்களால் சுத்தமான குடிநீரின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ம் திகதியை உலக நீர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

‌நீ‌ர் இ‌ன்‌றியமையாதது எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌வீதம் ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌வீதமும் ‌நீ‌ர்ப்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல் இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌வீதத்தில் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல், ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு கடுமையான நோ‌ய்க‌ள் தற்போது ஏற்பட்டு வருவதனை மறுக்க முடிவதில்லை.

மு‌‌ந்திய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் தொடங்‌கி‌ வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு அவ்வாறு செய்தனர். ஆனா‌ல் அதுபோன்றதொரு கா‌ட்‌சியை த‌ற்போது நா‌ம் எ‌ங்காவது பா‌ர்‌க்க இயலுமா?

முத‌லி‌ல் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் எ‌ன்ன தெ‌ரியுமா? ‌நீ‌ர் ஆதார‌ங்களைக் கா‌க்க வே‌ண்டு‌ம். ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் காணிகளாக மாற்றப்ப‌ட்டு‌ள்ளன. ம‌னித சமூக‌ம் அதனை நினைத்துப் பார்ப்பதில்லை. ‌

உலகில் 70 ‌வீதம் பர‌ப்பளவு ‌‌நீ‌ர் இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் 97.5 ‌ வீதம் க‌ட‌லி‌ல் இரு‌க்கு‌ம் உ‌ப்பு ‌நீ‌ர்தா‌ன். ‌மீதம் 2.5 ‌ வீதம் அள‌வி‌ற்கு‌த்தா‌ன் ‌நில‌த்தடி ‌நீ‌ர் உ‌ள்ளது. எ‌ஞ்‌சியு‌ள்ள 0.26 ‌ வீதம் ‌நீரை‌த்தா‌ன் உலக ம‌க்க‌ள் அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு தோறும் மார்ச் 22-ந் திகதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.நில‌த்தடி ‌நீரை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் மாசுபடாம‌ல் இரு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டியது‌ம் ம‌னித சமுதாய‌த்‌தி‌ன் கடமையா‌கிறது.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 110 கோடி மக்கள் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால் இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறி விடும். மக்க‌ள் குடி‌நீரு‌க்காக மக்கள் யுத்தம் புரியும் நிலைதான் ஏற்படும். எனவே உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசுபடுத்தாமல் உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம். நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி எதிர்கால சந்ததிக்கு சேமித்து வழங்குவோம்.

ஆர்.நடராஜன்
(பனங்காடு தினகரன் நிருபர்) 


There is 1 Comment

இந்த தமிழ் பெண்களில் வாழ்கையை எவ்வளவு இன்பம் துன்பம் கலந்து கொண்டுள்ளதா என்றுக்கு இந்த படத்தை நல்ல உதாரணமாகும்.

Pages

Add new comment

Or log in with...