Friday, April 19, 2024
Home » மருதமுனையில் சிறப்பாக நடைபெற்ற அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி பட்டமளிப்பு

மருதமுனையில் சிறப்பாக நடைபெற்ற அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி பட்டமளிப்பு

by mahesh
October 4, 2023 9:04 am 0 comment

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் 5 ஆவது பட்டமளிப்புவிழா கல்லூரியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.பதுறுத்தீன் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

காலை 8.00 மணிக்கு பட்டம் பெற்ற ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்களின் அறிமுக ஊர்வலம் கல்லூரி அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் நூராணியா ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பமாகியது. முஸ்லிம்களின் பாரம்பரிய ரப்பான் இசைக்கப்பட்டு பொல்லடி நிகழ்வுடன் நிகழ்வு நடைபெற்ற அல்-மனார் மத்திய கல்லூரி வரை அழைத்து வரப்பட்டார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். நஹ்ழா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.அபூஉபைதா (மதனி), தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மொழித் துறை ஓய்வுநிலை பேராசிரியர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலாலுத்தீன், அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் சூரி (மதனி), பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, இறக்காமம் பிரதேச செயலாளரும் அரபுக் கல்லூரியின் பழைய மாணவருமான அல்ஹாபிழ் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் ஆகியோர் கெளரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

முன்னாள் மேல்நீதிமன்ற ஆணையாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம், ஜெமீல், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.றைசுல் ஹாதி, கல்முனை குவாஸி நீதிமன்ற நீதிபதி எப். எம்.ஏ. அமீருல் அன்சார் மௌலானா, அல்-மனார் மத்திய கல்லூரி அதிபர் ஐ.எல் உபைதுல்லாஹ், மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் பேராசிரியர் ஐ.எல்.எம்.மாஹிர், மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.முஹர்ரப், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர் பொறியாளர் இசட். உபைதுல்லாஹ், ஓய்வுநிலை அதிபர் எஸ்.ஏ.எஸ். இஸ்மாயில் மௌலானா உட்பட பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை வானொலி பிரதிப்பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கினார்.

5 ஆவது ஹாபிழ் பட்டமளிப்பும், 2 ஆவது அல்-ஆலிம் பட்டமளிப்பாகவும் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் 9 அல்-ஆலிம்களும் 18 ஹாபிழ்களும் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ. அபூஉபைதா (மதனி), ஓய்வுநிலை அதிபர் எஸ்.ஏ.எஸ். இஸ்மாயில் மௌலானா ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஏ.எல்.எம்.ஷினாஸ் 
(பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT