கானாவில் மரம் விழுந்து பலர் பலி | தினகரன்

கானாவில் மரம் விழுந்து பலர் பலி

 

கானாவின் பிரபலமான நீர்வீழ்ச்சி ஒன்றில் மிகப்பெரிய மரமொன்று உடைந்து விழுந்ததில் அங்கு கூடி இருந்த 20 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த வினோதமான விபத்து நிகழும்போது புயல் ஒன்றுக்கு இடையே அவர்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள் என்று அவசரப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புயல் காரணமாகவே மரம் உடைந்து விழுந்துள்ளது.

பிரோங் அஹ்போ பிராந்தியத்தின் கின்டாபோ நீர்வீழ்ச்சியில் நேற்று முன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கானா தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது பலரும் மரத்தில் சிக்குண்டிருப்பதோடு தீயணைப்பு பிரிவினர் அந்த மரத்தை வெட்டி அவர்களை மீட்டுள்ளனர். விபத்தில் பாடசாலை மாணவர்களே பெரும்பாலும் கொல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...