தந்தையும் மகளுமாக மாறிய தாயும் மகனும் | தினகரன்

தந்தையும் மகளுமாக மாறிய தாயும் மகனும்

 

அமெரிக்காவில் தாய் மற்றும் மகள் இருவரும் பால்மாற்று சிகிச்சை மேற்கொண்டு தம்மை தந்தை மற்றும் மகளாக அடையாளம் மாற்றிக்கொண்டுள்ளனர்.

மிசிகனைச் சேர்ந்த எரிக் மெய்சன் 2015 ஆம் ஆண்டிலே பால்மாற்று சிகிச்சை மேற்கொண்டு ஆணாக மாறி இருப்பதோடு அதனைத் தொடர்ந்து அவரது 15 வயது மகனான கொரி பால்மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியுள்ளார்.

முன்னர் எரிகாவாக இருந்த எரிக் கடந்த மாதம் தனது இரு மார்பகங்களையும் அகற்றி பல ஆண்டுகள் கொண்ட கடுமையான உடலை மாற்றிக்கொள்ளும் சிகிச்சையை பூர்த்தி செய்தார்.

“எனக்கு இரண்டு வயதாக இருக்கும்போது ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் எனது மார்பகங்களை அகற்ற முடியுமாக இருந்தது” என்று எரிக் குறிப்பிட்டார்.

எனினும் எரிக் ஐந்து குழந்தைகளின் தாயாக இருந்தவராவார்.

அவரது மகனான கொரி பால்மாற்று சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தனது 18 வயதில் 21,000 டொலர்கள் செலவு கொண்ட பருவமடைதலை ஒடுக்கும் சிகிச்சையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளார். 


Add new comment

Or log in with...