உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடம் | தினகரன்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடம்

 

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் அண்டை நாடான டென்மார்க்கை பின் தள்ளி நோர்வே முதலிடத்தை பிடித்துள்ளது.

மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை அளவுகோளாக கொண்டு ஐ.நா ஆண்டுதோறும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் நிலையில் மத்திய ஆபிரிக்க குடியரசு கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் இடங்களை மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் பிடித்துள்ளன. அமெரிக்கா 19 ஆவது இடத்திலும் பிரிட்டன் 14 ஆவது இடத்திலும் உள்ளன.

ஆபிரிக்க துணை சஹாரா நாடுகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.

155 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் பட்டியலில் சிரியா 152 ஆவது இடத்திலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் யெமன் மற்றம் தென் சூடான் நாடுகள் 146 மற்றும் 147 ஆவது இடங்களிலும் உள்ளன. ஐக்கிய நாடுகளின் உலக மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் திகதியே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...