உதைபந்தாட்ட போட்டி சமனிலையில் நிறைவு | தினகரன்

உதைபந்தாட்ட போட்டி சமனிலையில் நிறைவு

மர்ஹும் வித்தியாநிதி டாக்டர் எம்.பீ.பீ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியின் முதலாவது ஆட்டம் சமனிலையில் முடிவுற்றது.

அட்டாளைச்சேனை தைக்காநகர் ஏவேடொப் கழக உதைப்பந்தாட்ட அணியினருக்கும் அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணியினருக்குமிடையிலான 03 போட்டிகளைக் கொண்ட இத் தொடரின் முதலாவது போட்டி அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரை மைதானத்தில் (19) நடைபெற்றது.

இரு அணிகளும் குறிப்பிட்ட நேர முடிவில் கோல்களை அடிக்கததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டும் இரு அணிகளும் கோல்களை போடவில்லை.இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் அதிபர் எம்.ஐ.முகம்மட் றியாஸ்,அட்டாளைச்சேனை நியு ஸ்டார் கழகத்தின் உபதலைவர் ஏ.எம்.அக்பர்,செயலாளர் ஏ.எல்.றியாஸ்,ஆசிரியர் எம்.அஸ்மல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) தைக்கநகர் சஹ்றா வித்தியாலய மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...