ஏறாவூர்- அஹமட் பரீட் பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பு | தினகரன்

ஏறாவூர்- அஹமட் பரீட் பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பு

விளையாட்டுத்துறை அமைச்சின் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா ஒதுக்கீட்டு நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட ஏறாவூர்- அஹமட் பரீட் பொது விளையாட்டு மைதானம் சினேக பூர்வ கிரிக்கெட் ஆட்டத்துடன் திறக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கடந்த காலங்களில் சேறும் சகதியும் நிறைந்து விளையாட்டிற்குப் பொருத்தமற்ற மைதானமாகக் காணப்பட்ட இம்மைதானத்தைப் புனரமைப்புச் செய்வதற்கென பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா- விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எம்.எச்.எம் ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து முதற்கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபாவும் அடுத்த கட்டமாக இரண்டரைக்கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யங் ஹீரோஸ் விளையாட்டுக்கழக தலைவர் எம்.இர்ஸாதின் தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழா நிகழ்வில் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம் தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இங்கு சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். சினேக பூர்வ கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற யங் ஹீரோஸ் அணிக்கு கிண்ணம் வழங்கப்பட்டது.

(ஏறாவூர் குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...