ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவர் செய்த காமெடி | தினகரன்

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவர் செய்த காமெடி

 

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது . இந்த போட்டியில் நடுவர் கிறிஸ் கேபனி (நியூசிலாந்து) செய்த காமெடி அனைவரையும் சிரிக்க வைத்தது.

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 603 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. புஜாரா இரட்டை சதமும், சஹா சதமும் அடித்து அசத்தினர்

இந்திய வீரர் புஜாரா 142 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை விளாச முயற்சித்தார். ஆனால் பந்து துடுப்பில் படாமல் விக்கெட் காப்பாளர் மேத்யூ வேட்டின் கையில் சிக்கியது. விக்கெட் காப்பாளரோ, பந்து வீசிய ஹேசில்வுட்டோ அவுட் கேட்டு முறையீடு செய்யவில்லை.

அதற்குள் நடுவர் கிறிஸ் கேபனி (நியூசிலாந்து) ஆட்டமிழப்பு என்பது போல் விரலை உயர்த்த தொடங்கினார்.

பிறகு அவுஸ்திரேலிய வீரர்கள் முறையீடு செய்யாததால் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக தூக்கிய விரலை அப்படியே தொப்பி மீது சொறிந்தபடி சமாளித்து விட்டார்.

அவரது செயல் விக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்களை திகைப்புக்குள்ளாக்கியது. அதே நேரத்தில் மற்றவர்கள் நடுவரின் காமெடியை கண்டு சிரித்து விட்டனர். 


Add new comment

Or log in with...