விமலின் விளக்கமறியல் ஏப்ரல் 03 வரை நீடிப்பு

Rizwan Segu Mohideen
 
68 நாட்களாக தொடர்ந்தும் விளக்கமறியலில்
 
அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இன்று (20) கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
 
இது தொடர்பான வழக்கு கடந்த மார்ச் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, விமல் வீரவங்ச சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள், தனக்காக நீதிமன்றில் வாதாடியிருந்த நிலையில், இன்றைய தினம் (20) அவருக்கு பிணை வழங்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், அவரது பிணை நிராகாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
விமல் வீரவங்ச, கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, 68 நாட்களாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
ஆயினும், பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் கட்சித் தலைவர்களின் பாராளுமன்ற கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு, நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
4 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...