153வது பொலிஸ் வீரர் தினத்தை நன்றியுடன் நினைவு கூருவோம்! | தினகரன்

153வது பொலிஸ் வீரர் தினத்தை நன்றியுடன் நினைவு கூருவோம்!

இலங்கை பொலிஸ் துறை அதன் 150 வது நினைவு தினத்தை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி அனுஷ்டித்தது. ஆனால் இம்முறை இலங்கை பொலிஸ் துறை நினைவுபடுத்துவது 153 வது பொலிஸ் வீரர் தினத்தையேயாகும்.

அமைப்பு ரீதியில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக 1864 மார்ச் மாதம் 21 ஆம் திகதி மத்திய மலைநாட்டுக்கு பிரவேசிக்கும் மாவனல்ல நகருக்கு அண்மித்ததாக இருக்கும் உதுவன்கந்த எனும் பிரதேசத்தில் சரதியல் உள்ளிட்ட சண்டியர்களை (கொள்ளைக்கூட்டம்) கைதுசெய்யும் பொருட்டு முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கையின் போது சரதியலின் சகாவான மம்மல மரிக்கார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் சஹான் வீர மரணமெய்திய உயிர்த்தியாகம் செய்த நாள் இதேபோன்றதொரு நாளில் தான்.

1864 மார்ச் 21ல் இடம்பெற்ற இச் சம்பவத்தை வைத்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர் தினமாக நினைவூட்டப்படுகின்றது.

இம்முறையும் பொலிஸ் வீரர் தினத்தின் முக்கிய நிகழ்வாக பொலிஸ் மா அதிபர் பூஜித் சேனாதி பண்டார ஜயசுந்தர தலைமையில் பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸ் படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில் இன்றைய நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் 1864 மார்ச் 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் நடந்த மாவனல்ல நகருக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபிக்கருவிலும் விசேட நினைவு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன் 1990 ஜூன் மாதம் 11 ஆம் திகதி 400 பொலிஸார் தமதுயிரை தியாகம் செய்த அம்பாறை ரூபஸ்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வீரர் நினைவு தூபிக்கருகிலும் முக்கிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

ஒரு மக்கள் கூட்டத்துக்கு அமைதியையும், பாதுகாப்பையும், சமாதானத்தையும் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு மற்றொருவரால் ஏதாவது உபகாரமாகச் செய்ய முடிந்தால் அதுதான் மேலான செயற்பாடாகும். அதிலும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்ய ஒருவரால் முடிந்தால் அது விலைமதிப்பற்றதொன்றாகும். அவ்வாறு உயிர்த் தியாகம் செய்த வீரர்களும், வீராங்கனைகளும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவுபெற்று வருகின்றனர். அவ்வாறான வரலாற்றுப் பதிவையே இன்று நாம் நினைவு கூருகின்றோம்.

தமது தாய் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பொலிஸ் துறையை சேர்ந்த சஹான் தொடங்கி இதுவரையில் 3111 பேர் தம்மை தியாகம் செய்துள்ளனர்.

இவர்களின் விகாரமகாதேவியின் பரம்பரையை சேர்ந்த 15 பேரும் உள்ளடங்குகின்றனர்.்

1864 முதல் 1971 வரை 107 வருடங்களில் 65 பேர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 1971 ஏப்ரல் கலவரத்தின் போது 38 பேர் உயிரை தியாகம் செய்துள்ளனர். 1988, 89 காலப் பகுதியில் தெற்கில் அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு 357 பேர் தமதுயுரை காணிக்கையாக்கியுள்ளனர்.

1978 பெப்ரவரி 14 ஆம் திகதி காங்கேசன்துறையில் உயிரைத் தியாகம் செய்த கான்ஸ்டபிள் கருணாநிதி தொடங்கி வடக்கு யுத்தம் காரணமாக 2594 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிர்த்தியாகம் செய்த பொலிஸ் வீரர்களின் குடும்பங்களுக்கும், கடமையின் போது அவயவங்களை இழந்த படைவீரர்களுக்கும். அவர்களது கொடுப்பனவை முழுமையாக பெற்றுக்கொடுக்கவும்,

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கடமையிலீடுபட்ட ஓய்வுபெறும் காலத்துக்கு முன்னர் அங்கவீனமுற்றவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுக்கவும்.

மீரிகம வல்போதலவில் பொலிஸ் வீரர் கிராமத்தை அமைத்து அவர்களின் குடும்பங்களை குடியமர்த்த வீடுகளை நிர்மாணிக்கவும் பொலிஸ் நலன்புரிச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தைரியத்துடன் நாட்டுக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த அவயவங்களை இழந்த வீரர்களையும் சதாகாலமும் நன்றியுணர்வுடனும் பற்றுதலுடனும் நினைவூட்டிக் கொண்டே இருப்போமாக அவர்களுக்காக பிரார்த்திப்போமாக.

 

பிரியந்த ஜயகொடி
பிரதிப் பொலிஸ் மா அதிபர்
பொலிஸ் ஊடக பேச்சாளர் 


Add new comment

Or log in with...