இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி ஒரு இளையோர் டெஸ்ட் மற்றும் ஐந்து இளையோர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதில் பாகிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஒருநாள் போட்டிகளும் ஒக்டோபர் 22 தொடக்கம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றவுள்ளது. இந்த அனைத்துப் போட்டிகளும் கராச்சியில் உள்ள நசனல் பேங்க் அரங்கில் நடைபெறவுள்ளது.
19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கை இளையோர்களின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.