கிண்ணியாவில் மாணவர்களின் வருகை கணிசமாக வீழ்ச்சி | தினகரன்

கிண்ணியாவில் மாணவர்களின் வருகை கணிசமாக வீழ்ச்சி

டெங்கு காய்ச்சல் தாக்கத்தால் கடந்த வாரம் மூடப்பட்ட கிண்ணியா பிரதேச பாடசாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்ட போதும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக இருந்தது. டெங்கு தாக்கத்தையடுத்து கிண்ணியாவில் 66 பாடசாலைகள் மூன்று தினங்களுக்கு மூடப்பட்டன.இந்தப்பாடசாலைகள் நேற்று(20) மீண்டும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்போது மாணவர்களின் வருகை மிகக் குறைவாக இருந்தது. எனினும் ஆசிரியர்களின் வருகை கணிசமான அளவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவை அதிபர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள 66 பாடசாலைகளுக்கும் தலா 10 பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 

கிண்ணியா விசேட, திருமலை மாவட்ட விசேட நிருபர்கள் 


Add new comment

Or log in with...