கட்டுநாயக்கவில் ஏப்ரல் 06 முதல் வழமையான விமான சேவைகள் | தினகரன்

கட்டுநாயக்கவில் ஏப்ரல் 06 முதல் வழமையான விமான சேவைகள்

திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 06 திகதி முதல் வழமைக்குத் திரும்புமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 06ம் திகதி முதல் சர்வதேச விமானங்களுக்கான ஓடுபாதை விமான நிலையத்தில் திறக்கப்படுமென தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான தெரிவித்துள்ளார்.

அன்றிலிருந்து விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதுடன் ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணி ஏப்ரல் ஐந்துடன் பூர்த்திசெய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

3350 மீற்றர் நீளத்தையும், 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த ஓடுபாதை சர்வதேச விமான, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய சீரமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக 7 . 2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவின் 5வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக விஜய விதான மேலும் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...