ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்கள் 28இல் திறப்பு | தினகரன்

ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்கள் 28இல் திறப்பு

ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்குபற்றலுடன் இம்மாதம் (28) ஒரேநாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்துவைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்தார்.கூட்டுறவுத்துறைக்கான கொள்கையை தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (20) நடைபெற்றபோது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.

மாகாண கூட்டுறவு அமைச்சர்கள், மாகாணகூட்டுறவு ஆணையாளர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலதிகச்செயலாளர், கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் அமைச்சர்உரையாற்றினார். அமைச்சர் ரிஷாத் இங்குகூறியதாவது:

இந்தவருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கும் அரசின் இலக்கு நிறைவுபெற்ற பின்னர் சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக சதொசவுடன் இணைந்து நாடுமுழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரேவிலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சதொச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணினி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கூட்டுறவுத்துறைக்கு புத்துயி ரூட்டும் வகையிலேயே இதற்கான கொள்கையொன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாகாண அமைச்சர்கள் மாகாணஆணையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களுடன் நாடு முழுவதிலுமுள்ள கூட்டுறவு அங்கத்தவர்களின் நன்மைகளையும் கருத்தில்கொண்டு ஒருதீர்க்கமான கொள்கையொன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.


Add new comment

Or log in with...