Friday, March 29, 2024
Home » சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம்
ரூ. 55 மில்லியன் செலவில்

சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம்

by mahesh
October 4, 2023 6:00 am 0 comment

சாய்ந்தமருது பிரதேசத்தில் உக்கிரமடைந்துவரும் கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 19 ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்துக்கு 55 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 35 மில்லியன் ரூபா நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, எச்.எம்.எம்.ஹரீஸ், கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர் எம். துளசிதாசன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(கல்முனை விசேட, பெரியநீலாவணை விசேட நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT