டி-காக், பவுமா ஆட்டத்தால் மீண்ட தென்ஆபிரிக்கா | தினகரன்

டி-காக், பவுமா ஆட்டத்தால் மீண்ட தென்ஆபிரிக்கா

வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் டி-காக், பவுமா ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 95 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் எடுத்தது .

நியூசிலாந்து-தென் ஆபிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

நியூசிலாந்து முதல் இன்னிஸ்சில் 268 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது

நிகோல்ஸ் சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிஸ்சை விளையாடி தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 24 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரபடா (9 ஓட்டங்கள்), டுமிஸ் (16 ஓட்டங்கள்), அம்லா (21 ஓட்டங்கள்), டுபிளசிலிஸ் (22 ஓட்டங்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். அந்த அணி 94 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் டிகாக்-பவுமா ஜோடி சரிவில் இருந்து அணி மீட்டது. டிகாக் 91 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 160 ஓட்டங்கள் சேர்த்தது.

சிறிது நேரத்தில் பவுமாவும் ஆட்டமிழந்தார். அவர் 89 ஓட்டங்கள் எடுத்தார். டி-காக், பவுமா ஆட்டத்தால் தென்ஆபிரிக்கா சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 95 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

இன்று போட்டியின் 3 ஆவது நாளாகும் 


Add new comment

Or log in with...