பங்களாதேஷ் அணி 467 ஓட்டங்கள் | தினகரன்

பங்களாதேஷ் அணி 467 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டையும் இழந்து 467 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணியை விட 129 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணியின் சஹீப் அல்-ஹசன் மற்றும் மெஸதாக் கொஸைன் ஆகியோரின் அபார இணைப்பாட்டம் காரணமாக அவ்வணி 129 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

சஹீப் அல்-ஹசன் 116 ஓட்டங்களையும் கொஸைன் 75 ஓட்டங்களையும் அணித்தலைவர் ரஹீம் 52, மிராஸ் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.6-வது விக்கெட்டுக்கு தலைவருடன் ஜோடி சேர்ந்த சகல துறைவீரர் சஹிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 116 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இவரது சதம் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 129 ஓட்டங்கள் முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த சதம் மூலம் தனது அணியின் 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 129 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் இந்த டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பங்களாதேஷ் அணியின் சகல துறைவீரர் சஹிப் அல் ஹசன், சிறப்புமிக்க அந்த அணியின் 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

29 வயதாகும் சாஹிப் அல் ஹசனுக்கு இது 49-வது டெஸ்ட் போட்டியாகும்.

பங்களாதேஷ் அணி 2 ம் நாளில் 214 /5 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் நேற்று 3ம் நாளில் அவ்வணி 243 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அணியின் தலைவர் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 1000 விக்கெட்டை வீழ்த்திய 2 ஆவது இலங்கையர் என்ற பெருமையை பெற்றார்.முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.

இலங்கை அணி சார்பாக சந்தகன் 4 விக்கெட்டையும் லக்மால் இரண்டு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

பின்னர் இலங்கை அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸிற்காக தரங்க-கருணாரத்தன ஜோடி களமிறங்கியது.இருவரும் முறையே ஆட்டமிழக்காமல் 25,25 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்று போட்டியின் 4 ஆவது நாளாகும். 


Add new comment

Or log in with...