கைத்தறிக்கு கைகொடுக்க ரெடி | தினகரன்

கைத்தறிக்கு கைகொடுக்க ரெடி

 

நடிகை சமந்தா சமூக சேவையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். சொந்தமாக அறக் கட்டளை தொடங்கி அதன் மூலம் நற்பணிகள் செய்கிறார். சமந்தாவின் நற்பணியை பயன்படுத்திக் கொள்ள தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்தது.

அமைச்சர் தாரக்க ராம ராவ் நடிகை சமந்தாவை கைத்தறி விற்பனை தூதராக நியமித்தார். பொறுப்பை ஏற்றுக்கொண்டவர், கைத்தறி விற்பனையை பெருக்க என்னென்ன பணிகளில் ஈடுபடுவது என்று ஆலோசித்தார். சமீபத்தில் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள டுப்பாக்கா பகுதிக்கு சென்ற சமந்தா அங்குள்ள கைத்தறி நெசவாளர்களை நேரில் சந்தித்தார்.

தனது வருகையை அவர் இரகசியமாகவே வைத்திருந்தார். திடீரென்று நெசவு பகுதிக்கு சமந்தா வந்து நின்றதை பார்த்ததும் அங்கிருந்த தொழிலாளர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்த சமந்தா, கைத்தறி விற்பனையை அதிகரிக்க தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறியதுடன், மாநில மற்றும் தேசிய அளவில் ஓடர்கள் பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தார். இதேபோல் பல்வேறு கைத்தறி நெசவாளர்களை நேரில் சந்திக்க சமந்தா முடிவு செய்திருக்கிறார்.


Add new comment

Or log in with...