யார் இந்த குண்டு கத்தரிக்காய்? | தினகரன்

யார் இந்த குண்டு கத்தரிக்காய்?

சிம்பு ஜோடியாக தம் படத்தில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. அடுத்து விஜய் ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு கன்னட இயக்குனர் பிரேமை மணந்தார். அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால் கர்நாடக அரசியலில் கவனம் செலுத்தியதுடன் பாரதிய ஜனதா, ஜனதா தளம் உட்பட 2 வருடத்தில் 3 கட்சிகளுக்கு மாறினார்.

சட்ட மன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். வெற்றி பெறவில்லை.

நடிகையாக இருந்தபோது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டியவர் திருமணம், அரசியல் என தனது பாதையை மாற்றிக் கொண்ட பிறகு உடற்கட்டை பராமரிப்பதில் கவனத்தை குறைத்துக் கொண்டார். அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் குண்டாகி காணப்படுகிறார். ஆனால் இதுபற்றி அவர் கண்டு கொள்ளாமல் வழக்கம்போல் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார்.


Add new comment

Or log in with...