பாராளுமன்றத்தில் நாடகம் | தினகரன்

பாராளுமன்றத்தில் நாடகம்

பாராளுமன்றம் என்பது நாட்டின் உத்தரீத்தரமான இடமென ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணம் சட்ட வழங்கள், சட்ட அங்கீகாரம் வழங்கப்படும் அதிகாரம் போன்று நிதி அதிகாரமும் அதற்கு கிடைத்துள்ளதனலாகும்.

முன்னாள் பிரதமர் செயலாளர்- கலாநிதி சுதத் குணசேகர

பொது தேர்தல் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் விருப்பு வாக்குகளுடன் 196 உறுப்பினர்களும் அவர்களது கட்சிகளுக்கான வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகளுக்கு விகித அடிப்படையில் கிடைக்கும் தேசிய பட்டியல் உறுப்பினர் முறையின் கீழ் மேலும் 29 உறுப்பினர்களுடன் 225 பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள். அரசியலமைப்பாளர்கள் என அழைக்கப்படும் குழுவினர் பாராளுமன்றத்தில் அதன் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.

அனைத்து மக்களினதும் கல்வி உள்ளிட்ட பல துறைகளின் அறிவு தொடர்பான புரிந்துணர்வும் அதன் மூலம் உருவாக்கப்படும் பின்னணி உள்ளது. பொது மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்து அனுபவங்கள் பாராளுமன்றத்தில் சரியாக பிரதிநிதிகளாக செயல்படவேண்டும். மக்கள் பிரச்சினைகளை பிரதிநிதிகள் சபையில் சரியான முறையில் பேசி அவற்றிற்கு சரியான விடை பெற்றுக்கொடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இலங்கை பாராளுமன்றத்தில் அன்று காணப்பட்ட உயர்தன்மை, கௌரவம் தொடர்பாக இன்று மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவமரியாதை, ஏளனம், பொருமையுடன் இணைந்த காடைத்தனத்தை வெளிப்படுத்தும் அறிக்கைகளைத் தவிர இன்று பாராளுமன்றத்தில் அறிவுபூர்வமான விவாதங்களுக்கு இடமில்லை என்பதே மக்களின் கருத்தாகும். அரசியலமைப்பின் தலைவர் பிரதமரானதும் பாராளுமன்ற சபையில் சபாநாயகருக்கே அதிகாரம் உள்ளது.

பாராளுமன்ற சம்பிரதாயம்

கட்சி ஒன்றை பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் நடு நிலையாகவே செயற்படவேண்டும். அவரின் குரலுக்கு கட்சி எதிர்க் கட்சி அனைவரும் செவிசாய்க்க வேண்டியது பாராளுமன்ற சம்பிரதாயத்தின் அடிப்படை இலட்சனையாகும். சபாநாயகராக தெரிவு செய்யப்படுபவர் நடுநிலையாக இல்லாவிட்டால் அது பிரச்சினையையே ஏற்படுத்தும்.

அந்த ஆசனத்துக்கு தெரிவு செய்யப்படுபவர் அதன் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டியது மிக முக்கியமாகும். பொது மக்களின் பிரதிநிதிகள் தங்கள் எதிர்பார்ப்புகளை அல்லது பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்களேயானால் அங்கு மோதல் குறைக்கப்படும். துரதிஷ்டவசமாக இன்று அவ்வாறான நிலைமை காணப்படவில்லை.

அநேகமானோர் செயலாற்றுவது தங்களின் சொந்த நலனுக்காகவோ அல்லது தங்கள் குழுக்களின் அதிபார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்காத்தான். அதன் மூலம் கருத்து வேறுபாடுகளும் மோதலும் ஏற்படும் பின்னணி உருவாவதை தடுக்க முடியாது. ஒருமுறை பாராளுமன்றம் கூடுவதற்காக இலட்சக் கணக்கான பணம் செலவிடப்படுகின்றது.

அவை பொதுமக்களின் பணமாகும். பொதுமக்களின் வாக்குகளினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் பொதுஜன நிதியை வீணடிக்கும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது நாட்டின் துரதிஷ்டமாகும். கடந்த காலங்களில் அவ்வாறான நிலைமையே அதிகமாக காணக்கிடைத்தது. எதிர்கட்சியினர் புரிந்துணர்வில்லாமல் நடவடிக்கையில் ஈடுபட்டு பாராளுமன்றத்தின் காலத்தை வீணடித்து பொதுமக்களின் பணத்தை எவ்விதப் பிரயோசனமும் இல்லாமல் செலவழிக்கும் வேளையில் அரசாங்கக் கட்சியினரும் அவர்களுக்கு சளைக்காமல் செயல்படுவது ஒருபோதும் அனுமதிக்க முடியாததாகும்.

கடந்த தினம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சபாநாயகரின் தீர்ப்புக்கு மாறாக செயல்பட்டது கவலைக்குரிய விடயமாகும். எதிர்க்கட்சியை விட ஆளும் கட்சிக்கே அரசாங்கத்தை சரியாக வழியில் நடத்தவேண்டிய பொறுப்புள்ளது. அண்மைய காலங்களில் பாராளுமன்றத்தில் அறிவுபூர்வமான விவாதம் நடைபெற்றதற்கான காட்சி அற்பமாகவே உள்ளது.

அன்று பாராளுமன்ற விவாதத்தின்போது பெரும் அறிவைப் பெறும் சந்தர்ப்பம் இருந்தது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் அனைவரும் மக்களின் மனதை கலந்தவர்களாக இருந்தார்கள். இன்று நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது. கொசொல் அரசன் 16 கனவுகளைக் கண்டார்.

அதை அவர் புத்தரிடம் சென்று கூறியபோது அதற்கு அவர் நீண்ட விளக்கம் அளித்தார். மாணிக்க கற்கள் நீரில் மூழ்கும்போது சாண வரட்டி நீரில் மிதப்பது அரசன் கண்ட ஒரு கனவாகும். எதிர்காலத்தின் தகுதியானவர்களை பின் தள்ளி தகுதியுள்ளவர்கள் முன்னேறாதே அதன் அர்த்தமென புத்தர் கூறினார். இன்று பாராளுமன்ற நடவடிக்கைகளை நோக்கும்போது புத்தரின் வார்த்தைகளை கண்முன்னே காணக்கூடியதாக உள்ளது.

2500 ஆண்டுகளாக புத்ததர்மம் பாதுகாக்கப்படும் இந்நாட்டில் உயர்ந்த இடமென போற்றப்படும் பாராளுமன்றத்தில் புத்தரின் கூற்று தொடர்பான சாட்சிகளை காணக்கூடியதாகவுள்ளது. எமக்கு கவலையையே தருகின்றது. இந்த துர்ப்பாக்கியமான நிலைமைக்கு விருப்பு வாக்குகள் முறையே காரணமாக அமைகின்றது. பணபலம் உள்ளவர்கள் பணத்தை செலவு செய்து வாக்குகளை வாங்கி பாராளுமன்றத்துக்கு வருகின்றார்கள். உண்மையான, திறமையான மற்றும் கற்றவர்கள் இந்த போட்டிக்கு முகங்கொடுக்க முடியாமல் ஒதுங்கி உலகில் கோலோச்சுகின்றார்கள்.

அண்மையில் நாட்டில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய விடயங்களில், அரசியல் கரமொன்று செயல்படுவதை அனைவரும் அறிவார்கள். இன்று அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் அடிப்படையேயாகும். அரசியலில் தகுதியற்றவர்கள் ஆட்சி செய்யும்போது நாட்டு மக்களுக்கு கடவுள் தான் துணை நிற்கவேண்டும்.

அன்று பீட்டர் செனமன், கொல்வின், எஸ். டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க, என். எம். பெரேரா போன்றவர்கள் ஆற்றிய உரைகள் இன்னும் மக்கள் மனதைவிட்டு அகலாது இருக்கின்றது. ஆங்கிலேயர்களும் பாராளுமன்றத்துக்கு வந்து அவர்களின் உரையை செவிமடுத்தார்கள்.

அவற்றில் புதிதாக கற்பதற்கு அநேக விடயங்கள் இருந்தன. இன்று பாராளுமன்ற வாசிகசாலையை எத்தனைபேர் பயன்படுத்துகின்றார்கள். ஊடகமும் தற்போதுள்ள நிலைமைக்கு பொறுப்புகூறவேண்டும். ஊடகங்களில் அநேகமாக முக்கியமற்ற விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதை காணும் அரசியல்வாதி பிரபல்யம் அடைய மேலும் மேலும் அவற்றையே கூறுகின்றார்கள். நல்லவற்றிற்கு அபூர்வமாக ஊடகங்களில் இடம்கிடைக்கின்றது.

தற்போதைய தேர்தல் முறை மூலம் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளின் அளவு 50 வீதத்துக்கும் குறைவானதே. தேர்தலில் மக்கள் நிராகரித்தவர்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்துக்கு வருகின்றார்கள். தேசிய பட்டியலை உருவாக்கிய அடிப்படை காரணமே இன்று மறைந்துபோயுள்ளது. மக்கள் நன்மைக்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய அறிஞர்கள், கற்றோர்கள் பாராளுமன்றம் வரவேண்டும் என்பதற்காகவே இம்முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அதற்கு மாறாகவே நடைபெறுகின்றது.

இன்று மாணவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் ஒரு தடவைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களில் தகாத நடத்தை காரணமாக மாணவர்களை அங்கிருந்து அகற்றிய சந்தர்ப்பங்களும் நிகழ்ந்துள்ளன.

தற்போதைய நிலையிலிருந்து விடுபட வேட்புமனு வழங்கும்போது கட்சித் தலைவர்கள் பணபலம், அடியாட்கள் பலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்குரிய தகுதியாக கொள்ளக்கூடாது.

மக்கள் பிரச்சினைகளை மறந்து தங்களுடைய தனிப்பட்ட விடயங்களை கதைக்கும் இடமாக பாராளுமன்றத்தை ஆக்கியுள்ள அரசியல்வாதிகள் குடும்பத்தை பராமரிக்கும் அரசியலிலிருந்து விடுபட்டு உண்மையான மக்களின் பிரதிநிதிகளாக மாறும் வரை பாராளுமன்றத்தில் புனிதம் பற்றி பேசுவது கேலிக்குரிய விடயமாகும்.

அசேல குருலுவங்ச
தமிழில்: வயலட்


Add new comment

Or log in with...