இலங்கை கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடத்தல்? | தினகரன்


இலங்கை கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடத்தல்?

 
இலங்கை கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று, சோமாலிய கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான 'ARIS-13' எனும் பெயருடைய கப்பல் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
 
சோமாலியா கடல் எல்லை வழியாக எரிபொருள் ஏற்றிச் சென்ற குறித்த கப்பலிலிருந்து இறுதியாக, உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கப்பலை கண்காணிக்கும் தொகுதியின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எரிஸ் 13 எனும் 1,800 தொன் கப்பலில், 8 கப்பல் குழுவினர் பயணித்ததாக, இக்கப்பலை கண்காணிக்கும் ஐக்கிய இராச்சிய வர்த்தக நிறுவனம் (UKMTO) தெரிவித்துள்ளது.
 
கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சோமாலிய கடல் கொள்ளையர்களால், வர்த்தக கப்பல் ஒன்று கடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும்.
 

Add new comment

Or log in with...