சிறைச்சாலை பஸ் துப்பாக்கிச்சூடு; OIC இற்கு இடமாற்றம் | தினகரன்

சிறைச்சாலை பஸ் துப்பாக்கிச்சூடு; OIC இற்கு இடமாற்றம்

 
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், களுத்துறை வடக்கு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜே.பி. ஆனந்த சில்வா, பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் கீழ்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த ஜனவரி 27 ஆம் திகதி, களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
இது தொடா்பாக இன்று (10) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் விளக்கமளிக்கப்பட்டது.
 
களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸில் சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்போது களுத்துறை சிறைப் பொறுப்பதிகாரியால், சிறைக் கைதிகளை கொண்டு செல்வதற்கு, 33 முறை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  
 
சம்பவம் இடம்பெற்ற தினம் தவிர்ந்த மற்றொரு தடவையும் களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
 
இது தொடா்பாக களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளதோடு, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
(அஷ்ரப் சமத்)
 
 

Add new comment

Or log in with...