எதிரணி குழப்பம்; பாராளுமன்றம் 21 வரை ஒத்திவைப்பு | தினகரன்

எதிரணி குழப்பம்; பாராளுமன்றம் 21 வரை ஒத்திவைப்பு

 
பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கூச்சல் குழப்பம் காரணமாக இவ்வாறு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தங்களை ஒரு அணியாக கருதி, அவ்வணிக்கு வழங்கப்பட வேண்டிய நேரத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இவ்வாறு கூச்சல் குழப்பம் விளைவித்ததை அடுத்தே, பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய (10) பாராளுமன்ற நடவடிக்கைகள், மாலை 7.30 மணி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(மகேஸ் பிரசாத்)
 
 

Add new comment

Or log in with...