குழந்தை உட்பட இருவரை கொன்ற சந்தேகநபர் கைது | தினகரன்

குழந்தை உட்பட இருவரை கொன்ற சந்தேகநபர் கைது

 
தெரணியகல பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
கடந்த திங்கட்கிழமை (06) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 07 வயதான பெண் குழந்தை ஒன்றும் 45 வயதான நபர் ஒருவரும் கொலை செய்யப்பட்டிருந்ததோடு, 41 வயதான குழந்தையின் தாய் கத்திக்குத்துக்கு இலக்காகி பாரிய காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து, குறித்த கொலைக்கு காணிப்பிரச்சினையே காரணம் என தெரியவந்துள்ளது.
 
அந்த வகையில் சந்தேகநபர் தொடர்பான விடயங்களை அறிந்த பொலிசார் குறித்த நபரை, தேடும் பணியில் நேற்று (08) பிற்பகல் முதல் ஈடுபட்டு வந்தனர்.
 
இது தொடர்பில், 5 பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சிவனொளிபாதமலை வனப் பகுதியிலிருந்து 19 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 

Add new comment

Or log in with...