டொல்பின்களை பிடித்து மறைத்து வைத்திருந்த 09 பேர் கைது | தினகரன்

டொல்பின்களை பிடித்து மறைத்து வைத்திருந்த 09 பேர் கைது

 
திருகோணமலை துறைமுக பிரதேசத்தில் வைத்து இறந்த நிலையிலிருந்த 12 டொல்பின்களுடன் 09 பேரை பொலிசார் கைகது செய்துள்ளனர்.
 

திருகோணமலை துறைமுக பிரதேசத்திற்கு சொந்தமான உட்துறைமுக கடல் எல்லையில் கரைவலையை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த டொல்பின்கள் சிக்கியுள்ளன.

 
நேற்று (08) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த வலை உரிமையளர் உள்ளிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி கட்டளைச்சட்டம் மற்றும் சர்வதேச நீரியல் வள சட்டத்தின் கீழ், அருகி வரும் உயிரினமான டொல்பின்களை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
இதன்போது பொலிசார் மேற்கொண்ட சோதனைகளின்போது, குறித்த டொல்பின்கள் ஒன்றாக கட்டப்பட்டு, கடலின் அடியில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை மீட்டுள்ளனர்.
 
தமது வலைகளில் சிக்கிய குறித்த டொல்பின்களில் ஒரு சிலவற்றை கடலில் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை குற்ற ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருவதோடு, குறித்த நபர்களை இன்று (09) நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
(படங்கள்: திருகோணமலை விசேட நிருபர் - ஏ.ரி.எம். குணாநந்த)
 
 
 

Add new comment

Or log in with...