பிரபல பாடகர் மரணம்; மகன் பரபரப்பு தகவல் | தினகரன்

பிரபல பாடகர் மரணம்; மகன் பரபரப்பு தகவல்

 
பிரபல சிங்கள பாடகரான விக்டர் ரத்நாயக்க மரணமடைந்துள்ளதாக அவரது மகன் facebook சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
 
தனது தந்தை கடந்த மார்ச் 01 ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக, அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தனிப்பட்ட காரணம் தொடர்பிலேயே குறித்த பதிவை தான் பதிவிட்டுள்ளதாக அவரது மகனான லெலும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 
75 வயதான (1942.02.18) பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்க, 33 வயதான பெண் ஒருவரை அண்மையில், திருமணம் முடித்துள்ளமை தொடர்பிலேயே குறித்த மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஒரு பெண் தனது தந்தையை வலையில் வீழ்த்தியுள்ளதாகவும், அப்பெண் தான் விரும்பியபடி அவரை கட்டுப்படுத்துவதாகவும் அவரது மகன் லெலும் ரத்நாயக்க குறித்த பதிவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
குறித்த பெண்ணுடன் 9 வருடங்களாக காதல் தொடர்பு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதோடு, அவரது பிறந்த தினமான பெப்ரவரி 18 ஆம் திகதி, அப்பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை, அண்மையில் தனது தாயின் நினைவு தினம் தொடர்பில் இடம்பெற்ற சமய நிகழ்வில்கூட விக்டர் ரத்நாயக்க கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கும் அவரது மகன் லெலும், "இனி தந்தை மகன் எனும் உறவு எமக்குள் கிடையாது.. எனது சாவுக்கும் வர வேண்டாம்" என தனது தந்தை தனக்கும், அண்ணனுக்கும் தங்கைக்கும் தொலைபேசியில் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஆயினும் உங்களைப் போல் நானும், விக்டர் ரத்நாயக்க மீது அன்பு கொண்டவன் ஆனால் எனது தந்தை மரணித்து விட்டார் என facebook இல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்க, சுமார் 5 கோடி பெறுமதியான சொத்துகளுக்கு சொந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...