Friday, March 29, 2024
Home » வெளிவேடமான வாழ்க்கை

வெளிவேடமான வாழ்க்கை

by sachintha
October 3, 2023 8:20 am 0 comment

பாவிகளும்‌ அநீதி செய்தவர்களும்‌ மனம்‌ மாறி இறைவனை ஏற்றுக்‌ கொண்டதால்‌ விண்ணரசில்‌ இடம்பெற பரிசேயர்களோ இறைவனின்‌ விருப்பத்தை நிறைவேற்றுவதாக எண்ணி இறுமாந்து செயலில்‌ முரண்பட நடந்ததால்‌ விண்ணரசை இழக்கின்றனர்‌.

இயேசு கிறிஸ்துவின் உவமை ஒன்று கற்பிக்கின்ற பாடம் இது.

ஓவியன்‌ ஒருவன்‌ தான்‌ தீட்டிய அருமையான ஓவியம்‌ ஒன்றை மக்கள்‌ கூடும்‌ ஒரு பொது இடத்திலே வைத்து அதன்‌ கீழே “இதில்‌ குறை காண்பவர்கள்‌ இந்தப்‌ படத்தின்‌ மேலே தங்கள்‌ கையெழுத்திட்டுச்‌ செல்லவும்‌” என்ற குறிப்பை எழுதிவிட்டுச்‌ சென்றான்‌.

மறுநாள்‌ அதைப்பார்த்த அவனுக்குத்‌ தூக்கிவாரிப்போட்டது. ஓவியம்‌ முழுவதும்‌ இடைவெளியின்றி ஒரே கையொப்ப மயம்‌. அவன்‌ மீண்டும்‌ மற்றொரு ஓவியத்தை வரைந்து முன்பு போல்‌ அதே இடத்தில்‌ வைத்து அதன்‌ கீழே, “இந்த ஒவியத்தில்‌ குறை காண்பவர்கள்‌ திருத்தம்‌ செய்துவிட்டுப்‌ : போகவும்‌” என்ற குறிப்பை விட்டுச்‌ சென்றான்‌.

என்ன வியப்பு!

மறுநாள்‌ அந்த ஓவியம்‌ எவருடைய கையும்‌ படாமல்‌ அப்படியே இருந்தது. அதன்‌ பொருள்‌ என்ன? சொல்வது எளிது செயல்படுவது கடினம்‌. “சொல்லுதல்‌ யார்க்கும்‌ எளிய, அரியவாம்‌ சொல்லிய வண்ணம்‌ செயல்‌” என்பது திருக்குறள்‌.

“தப்புத்தாளங்கள்‌” என்று ஒரு தமிழ்த்திரைப்படம்‌. அதில்‌ ஒரு காட்சி. மேடையில்‌ ஒருவன்‌ முழங்குகிறான்‌, விபச்சாரத்தை ஒழிப்பேன்‌. சாதிப்‌ பாகுபாட்டை வேரறுப்பேன்‌, வறுமையை விரட்டியடிப்பேன்‌… என்ற போக்கில்‌. அந்தத்‌ தெருவின்‌ முனையில்‌ அமர்ந்திருக்கும்‌ ஒரு விலைமகள்‌ தனக்குள்ளே முணங்குகிறாள்‌: “மேடையில்‌ தேன்‌ சொட்டப்‌ பேசும்‌ இந்த அரசியல்வாதி பேசிவிட்டுக்‌ கூட்டம்‌ கலைந்ததும்‌ நேரே இங்கே … என்னிடம்தான்‌ வருவான்‌”

அன்பையும்‌ பண்பையும்‌, பண்பாட்டையும்‌ பற்றி மேடை தோறும்‌ வாய்கிழிய முழங்கிவிட்டு, கீழே இறங்கியதும்‌ அவற்றின்‌ விலையென்ன என்று கேட்கும்‌ வாய்ச்சொல்‌: வீரர்களுக்குக்‌ குறைவில்லை.

இதுபோன்ற போக்கும்‌ தன்மையும்‌ கொண்ட பரிசேயர்களுக்கும்‌ பூதத்‌ தலைவர்களுக்கும்‌ நல்லதொரு பாடம்‌ கற்பிக்க விரும்புகிறார்‌ கிறிஸ்து. அவர்களின்‌ மனநிலையை எடுத்துரைக்கின்ற – இடித்துரைக்கின்ற இயேசுவின்‌ உவமைகள்‌ மூன்று: 1. புதல்வர்கள்‌ இருவர்‌, 2. கொடிய குத்தகைக்காரர்‌, 3. திருமண விருந்து.

முதன்மையாக வரும்‌ உவமையில்‌ மக்கள்‌ இருவரைக்‌ குறிப்பிட்டு, “இவ்விருவருள்‌ எவர்‌ தந்தையின்‌ விருப்பப்படி செயல்பட்டவர்‌?” என்று இயேசு கேட்க, மூத்தவரே என்று விடையளித்தனர்‌ (மத்‌. 21:31).

பாவிகளும்‌ அநீதி செய்தவர்களும்‌ மனம்‌ மாறி இறைவனை ஏற்றுக்‌ கொண்டதால்‌, விண்ணரசில்‌ இடம்பெற, பரிசேயர்களோ இறைவனின்‌ விருப்பத்தை நிறைவேற்றுவதாக எண்ணி இறுமாந்து செயலில்‌ முரண்பட நடந்ததால்‌ விண்ணரசை இழக்கின்றனர்‌.

இந்த உவமை கற்றுத்‌ தரும்‌ பாடம்‌ என்ன?

அன்பு சொல்லில்‌ அன்று, மாறாகச்‌ செயலில்‌ எண்பிக்கப்பட வேண்டும்‌.

. இருவரில்‌ எவன்‌ சிறந்தவன்‌ என்பதன்று. மாறாக இருவரில்‌ யார்‌ செயலில்‌ இறைவிருப்பத்தை நிறைவேற்றுவது என்பதே கேள்வி.

இரண்டு பேருமே தந்தைக்கு முழுமையான மகிழ்ச்சியை அளித்தவர்கள்‌ அல்ல. ஏதோ ஒரு கட்டத்தில்‌ இருவருமே தந்தையைப்‌ புண்படுத்தியவர்களே. பரவாயில்லை என்னும்‌ அளவுக்கு ஒருவன்‌ செயலால்‌ உயர்ந்து நிற்கிறான்‌. சிறந்த மகன்‌ (14௦81 801) யார்‌? தந்தையின்‌ விருப்பத்துக்குச்‌ சரி: என்று சொல்லி செயலில்‌ இறங்குபவனே!

அந்த மூன்றாவது மகன்‌ – சிறந்த மகன்‌ இயேசுவே! “நாங்கள்‌ அறிவித்த இறைமகன்‌ இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில்‌ ‘ஆம்‌’ என உண்மையையே பேசுபவர்‌” (2. கொரி. 1:19). திருத்தூதர்‌ பவுல்‌ குறிப்பிடும்‌ அந்த இயேசுவே என்ன சொன்னார்‌? “நீங்கள்‌ பேசும்போது ஆம்‌ என்றால்‌ ஆம்‌ எனவும்‌ இல்லை என்றால்‌ இல்லை எனவும்‌ சொல்லுங்கள்‌. இதைவிட மிகுதியாகச்‌ சொல்வது எதுவும்‌ தீயோனிடமிருந்தே வருகிறது” (மத்‌. 5:37). “என்னை நோக்கி “ஆண்டவரே ஆண்டவரே” எனச்‌. சொல்பவரெல்லாம்‌ விண்ணரசுக்குள்‌ செல்வதில்லை. மாறாக விண்ணுலகில்‌ உள்ள என்‌ தந்தையின்‌ திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்‌” (மத்‌. 7:21) தலைமைக்‌ குருக்களும்‌ மறைநூல்‌ அறிஞர்களும்‌ எப்பொழுதும்‌ கடவுள்‌ பெயரைச்‌ சொல்லியே பிழைப்பு நடத்தினார்கள்‌. ஆனால்‌ கடவுளின்‌ விருப்பத்தைத்‌ தங்கள்‌ வாழ்வில்‌ அவர்கள்‌ செயல்படுத்தினார்களா என்றால்‌ இல்லை. அவர்களின்‌ வெளி வேடத்தைத்‌ தான்‌ இந்த இரு புதல்வர்கள்‌ உவமையில்‌ இயேசு தோலுரித்துக்‌ காட்டுகிறார்‌.

அதனால்தான்‌ “அவர்கள்‌ என்னென்ன செய்யும்படி கூறுகிறார்களோ அவற்றையெல்லாம்‌ கடைப்பிடித்து நடந்து வாருங்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ செய்வது போல நீங்கள்‌ செய்யாதீர்கள்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ சொல்வார்கள்‌. செயலில்‌ காட்டமாட்டார்கள்‌” (மத்‌. 23:3) என்று மக்களை எச்சரிக்கிறார்‌. ( யாக்‌. 1:22-25).

ஜோன்‌ பவுல்‌ என்ற அறிஞர்‌ சொல்வது போல்‌ நாம்‌ ஒவ்வொருவரும்‌ ஒரு முகமூடி அணிந்து அதற்குள்‌ ஒளிந்து கொள்கிறோம்‌. நமது சுயத்தைப்‌ பார்க்கிற திறன்‌ நமக்கில்லை. நமது உண்மை நிலையை அறியும்‌ துணிவு இல்லை. அதற்கான ஆர்வம்‌ இல்லை. அதனால்‌ முயற்சியும்‌ எடுப்பதில்லை.

நமது வாழ்க்கையிலும்‌ நாம்‌ நல்லவர்களாகத்‌ தோன்ற வேண்டும்‌ என்பதில்தான்‌ கவனம்‌ எசலுத்துகீறோமே தவிர நல்லவர்களாக ஒருப்பதில்‌ அல்ல. பொய்முகங்கள்‌ எவ்வளவு நாட்களுக்கு: நிலைக்கும்‌? இதில்‌ அதிசயம்‌ என்னவென்றால்‌, கடவுளையும்‌ தோற்றத்தால்‌ ஏமாற்றி விடலாம்‌ என்று நாம்‌ நம்புவதுதான்‌.

பாவிகளாக இருக்கலாம்‌. நாம்‌ போலிகளாக இருக்கலாமா?

நம்மில்‌ பெரும்பாலானவர்கள்‌ நற்செய்தியில்‌ வரும்‌ இருவித மக்களாக இருக்கிறோம்‌. ஒரு சிறிய ஊர்‌. அங்கே ஒர்‌ ஏரி. நிறைய மீன்கள்‌. நீர்‌ வற்றியதும்‌ ஊரார்‌ மின்‌ பிடித்துக்‌ கொள்ள நாட்டாண்மை பணிக்கிறார்‌.

அந்த நாள்‌ ஞாயிறு. ஞாயிறு திருப்பலிக்குச்‌ செல்ல வேண்டுமே என்ற எண்ணம்‌ சிலருக்கு. மீன்‌ பிடிக்க வேண்டும்‌ என்ற விருப்பம்‌ வேறு சிலருக்கு. திருப்பலிக்குச்‌ சென்றவர்கள்‌ “*இந்நேரம்‌ எவ்வளவோ மின்‌ பிடித்திருக்கலாமே”” என்று * அவர்கள்‌ எண்ணமெல்லாம்‌ எரியில்‌ இருந்தது.

மீன்‌ பிடித்துக்‌ கொண்டிருந்தவர்கள்‌ “இந்நேரம்‌ திருப்பலி தொடங்கியிருக்கும்‌, மறையுரை நடக்கும்‌” என்று அவர்கள்‌ எண்ணமெல்லாம்‌ கோவிலைச்‌ சுற்றிச்‌ சுழன்றது. இவர்களில்‌ யார்‌ கடன்பூசையை நிறைவேற்றினார்‌?

-அருட் தந்தை இ.லூர்துராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT