பேராதனை மாணவர் 15 பேருக்கும் 16 வரை விளக்கமறியல் | தினகரன்


பேராதனை மாணவர் 15 பேருக்கும் 16 வரை விளக்கமறியல்

 
பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
 
கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த 15 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில், மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தி, நிர்வாணம் செய்தமை தொடர்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அனுமதி வழங்குமாறு பொலிசார் நீதிமன்றில் கேட்டுக்கொண்டனர்.
 
அதனையடுத்து, உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி, அழிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட காட்சிகள் உள்ளதா என ஆராய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி, பேராதனை, கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலரால், முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர், பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக ஒழுக்காற்று மேற்பார்வையாளர்களுக்குக் கிடைத்த தகவல்களையடுத்து பொலிஸ் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற வீட்டை சுற்றிவளைத்து மாணவர்களை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...