வன்னி பல்கலை பல்துறையில் பயனுள்ளதாக அமையும்! | தினகரன்

வன்னி பல்கலை பல்துறையில் பயனுள்ளதாக அமையும்!

 

ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரில் தெரிவிப்பு

 
வன்னி பல்கலைக்கழகம் அமைந்தால் இலங்கையருக்கு பல்துறையில் பயனுள்ளதாக அமையும்என ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், வவுனியா வளாக ஊழியர் சங்கம், வவுனியா வளாக மாணவர் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து  வவுனியாவில் நடத்திய வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றகோரிய பேரணியின் பின்னர் இவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கையளிப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்த மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
வவுனியாவளாகஆசிரியர் சங்கம் ஆகிய நாம் வவுனியா வளாக ஊழியர் சங்pகம், வவுனியாவளாகத்தின் மூன்றுமாணவர் சங்கங்கள் மற்றும் வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களையும் அங்கத்தவர்களையும் இணைத்து மேற்குறிப்பிட்டவிடயத்தில் எமது மிகுந்தகவனத்தை உங்கள் முன் மிகுந்த பணிவுடன்முன்வைக்கின்றோம். 
 
இவ் வன்னிப் பிராந்தியத்திலுள்ளமேற்குறிப்பிட்டஊர்வலத்தைவவுனியாமக்களுடனும், ஊடகத்துறையினருடனும், அரசியல் பிரதிநிதிகளுடனும் இணைந்து நடத்திய பின்பு தங்களிடம் இந்த கோரிக்கை மடலைசமர்ப்பிக்கின்றோம்.
 
மேதகு ஜனாதிபதிஅவர்களே, இலங்கையின் வடமத்திய மாகாணமாகிய ஒருபுறபகுதி பிராந்தியத்தில் ஒரு சாதாரணவிவசாயக் குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். தங்களுக்கு நன்கு தெரிந்த விடயம் யாதெனில் இலங்கையின் புறபகுதிகளின் அபிவிருத்தி தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கான முக்கியத்துவத்தைப் பற்றிய போதியளவு அனுபவத்தையும் புரிதலையும் நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். வன்னியானது இலங்கையினுடைய புறபகுதியில் காணப்படும் ஒருபிராந்தியமாகும். 
 
எங்களுக்குபோர்க்கால மற்றும் போரிற்குப் பிந்தியகால அனுபவங்களும் அதன் பின்னரான கல்வி பற்றிய மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய உள்நாட்டுக்கு பொருந்தக்கூடிய, மனிதபொருளாதார அபிவிருத்தி விடயங்களை இந்தபிராந்தியத்தில் ஆய்வுசெய்வதற்குமான புரிதலையும் நாம்போதியளவு கொண்டிருக்கிறோம்.
 
பல்கலைக்கழகமாணவர்களின் அனுமதியை 25,000 இலிருந்து 50,000 இற்கு அதிகரிப்பதற்கான கொள்கை ஒன்றை தங்களின் அரசுகொண்டுள்ளதனால் வன்னிப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் இவ் அரசின் கொள்கைக்குப் பங்களிக்கும்.
 
1991 ஆம் ஆண்டில் வவுனியாவில் வடமாகாண இணைந்த பல்கலைக்கழககல்லூரியை அமைத்ததற்காக இலங்கை அரசை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். 1997இ சித்திரை 1 ஆம் திகதியில் இந்த இணைந்த பல்கலைக்கழக கல்லூரியானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டதையும் நாம் வரவேற்கிறோம்.
 
இப்பொழுது நாங்கள் வவுனியா வளாகத்தினுடைய 25வது வருட வெள்ளிவிழாவை கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். ஆயினும் இந்தகொண்டாட்டம் ஒரு பெயரளவிலான பெறுமதியையே கொண்டிருக்கின்றதோ என நாம் சந்தேகிக்கிறோம்.
 
ஏனெனில் 1996 மற்றும் 1997 இல் நான்கு இணைந்த பல்கலைக்கழககல்லூரிகள் நான்கு புதிய பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட்டன. ஆனால் எமது வளாகமோ 25 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு குறிப்பிடத்தக்கமாற்றமோ, வளர்ச்சியோ இன்றி வளாகமாகவே இருந்துவருகின்றது. 
 
இந்த 25 ஆண்டுகள் நீண்ட இந்ததொய்வுநிலை இந்தநிறுவனத்தின் சகலநலன்விரும்பிகளும் இந்தவளாகம்பி அபிவிருத்தியின்றி தேங்கி நிற்கின்ற நிலையைக்கண்டு சோர்ந்து போயிருக்கின்றனர். வன்னியானது காலனித்துவ காலத்திலும் அதற்கு முன்பான சுதந்திரநிலையிலும், தீவிர சுதந்திர வேட்கையுடனும் தனக்கே உரித்தான வளமிகு பாரம்பரியங்களையும் கொண்ட இலங்கையின் ஒரு பிரதானபிராந்தியமாகும்.
 
காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்களின் ஒரு காந்தபிரதேசமாக இந்த பிராந்தியம் இருந்ததன்பின்பு தற்போது இது வரலாற்றுப் புறக்கணிப்பிற்குட்பட்டு நிற்கிறது. வவுனியா ஒருபெரிய பிராந்தியமான வன்னியின் நகரமாகவிளங்குகின்றது. வன்னியானது தற்போது வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி ஒப்பீட்டளவில் ஒரு அபிவிருத்தி குறைந்த பிராந்தியமாக இருக்கின்றது.
 
இந்த பாரம்பரிய வன்னிபிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் தோற்றமானது பல்லின பல்மத பல்பண்பாட்டுமையமாக மாறக்கூடிய ஒரு அடையாளமாக இருக்கின்றது. ஏனெனில் வவுனியாவானது தமிழ், சிங்கள பிரதேசங்கள் தொட்டு நிற்கின்ற முகாந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சியான ஒரு பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது.
 
இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன்தான் 25 வருடங்களுக்கு முன்பு இவ் வளாக நிறுவனம் யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்பாரப்புடன் பணிபுரிய உருவாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புஎன்னவெனில்  எல்லா பல்கலைக்கழகங்களும் ஒரு காலகட்டத்தில் எல்லா தகுதிகளையும் கொண்ட பல்கலைக்கழகங்களாக மாறவேண்டும் என்பதே! 
 
போர்க் காலத்திலே எதிர்கொண்ட எத்தனையோ பின்னடைவுகளுடனும், சமாதானகாலத்திலே ஏற்பட்ட முன்னேற்றங்களுடனும் இந்தவளாகம் பலதுறைகளில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. இது அறிவியல் மற்றும் முகாமைத்துவத்தில் பொருத்தமான பல பட்டப்படிப்பு கற்கைநெறிகளை கொண்டிருக்கிறது. இதனுடைய பட்டதாரிகள் சிறந்த இடங்களை அடைந்து நாட்டிற்குசேவை செய்கின்றனர்.
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது ஒரு போட்டித்தன்மை மிக்கசெயன்முறையின் மூலம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பை விசேட நிதி அளிப்புடன் நடாத்துவதற்கு வவுனியாவளாகத்தை தேர்வு செய்தது. அதன் விளைவாக எமது வளாகம் அந்த கற்கைநெறியை சிறப்பாக நடாத்திக்கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் இது ஒரு பீடமாக தரமுயர்த்தப்பட இருக்கிறது.
 
இத்தகைய சாதனைகளின் பதிவுகள் இருப்பினும் பொதுவானஅலட்சியப்போக்கினாலும், நேரடிநிதிஒதுக்கீட்டுக் குறைவினாலும் வளாகத்தின் மேலதிக வளர்ச்சிதடைப்பட்டு நிற்கிறது. கல்விசார் ஊழியர் மட்டத்திலாகட்டும் அல்லது சமூகமட்டத்திலாகட்டும் உண்மையில் எல்லோரும் பங்களிக்ககூடிய நிறுவன முகாமைத்துவம் இங்கு இல்லை. உதாரணமாக வவுனியாவானது கொழும்பிலிருந்து வந்து போகக்கூடிய தூரத்திலிருந்தாலும் முதுநிலைவிரிவுரையாளர்கள் இங்கு வருவதற்கு தயங்குகின்றார்கள்.
 
வவுனியா வளாகத்தை ஒரு சுயாதீன பல்கலைக்கழகமாக உயர்த்துவது காலத்தின் கட்டாயம். அதன்மூலம் அதனுடைய வளர்ச்சியானது நிறுவனத்திற்குஉள்ளேயும் வெளியேயும் தடையில்லாமல் நிகழவேண்டியதொன்று. இந்த மாற்றம் மேற்குறிப்பிட்ட எல்லாத்தடைகளையும் நீக்கக்கூடியது. ஆகையால்தான் இன்று நாங்கள் ஒதுக்கீடுகளுடன்கூடிய சுயாதீன அந்தஸ்தை அனுமதிக்குமாறு வேண்டுகின்றோம்.
 
இதன் மூலம் வளாகம் இப்போதைவிட மிகச்சிறப்பாக பங்காற்றும். கடல்வளகற்கைநெறி, வனவளகற்கைநெறிகளை கொண்டதுறைகளைஉள்ளடக்கி இயற்கை விஞ்ஞானபீடமொன்றை நாம் உருவாக்கினால் எமது வன்னிப்பல்கலைக்கழகம் இப்பிராந்தியத்திலுள்ள இவ்வளங்களை ஆய்வு செய்வதற்கும், பேணுவதற்கும் பணியாற்றக்கூடியதாய் இருக்கும்.
 
ஓர் வன்னி சார்ந்த சமூக விஞ்ஞானபீடம் வன்னியின் வரலாற்று முகத்தையே உலகமறிய வைக்கக்கூடும். நாங்கள் நம்புவதென்னவெனில் இத்தகைய துறைகளை அனுமதிப்பதன் மூலம் எமது புதியபல்கலைக்கழகம் ஒரு தேசிய மட்டத்தில்  முக்கியம் பெறும். அதன் விளைவாக இப் பல்கலைக்கழகம் உயர்ந்த தரமுள்ள அலுவலர்களையும் வளவாளர்களையும் மாணவர்களையும் கவர்ந்து தனது பணிநோக்கினை இலகுவாக அடையக்கூடியநிலையை அடையும்.
 
எல்லாவிதமான நலன் விரும்பிகளையும் நலனாளிகளையும் உள்ளடக்கியதான முழுமையான பங்களிப்பு முகாமைத்துவம் ஒன்றுடன் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டால்எமது வளாகம் வீறுநடைபோடும். தனது தேசத்திற்கும் வன்னிப்பிராந்தியத்திற்கும் உன்னதமானஆய்வுசார் நன்மைகளை வழங்கும் பல்கலைக்கழகமாக செயலாற்றும்.
 
வன்னிப்பிராந்தியமானது மிகப்பெரியநிலம், கடல், சூழல், வன வளங்களைக்கொண்டிருந்தாலும் அவைகள் உச்சகட்ட அளவில் அபிவிருத்திக்கும், பாவனைக்கும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஆகையால் புதிதாக அமைக்கப்படும் பீடங்கள் இவ் வளங்களின் உள்ளாற்றலை அபிவிருத்திக்குப்பயன்படும் விதத்தில், குறிப்பாக மீன்பிடிக்கைத்தொழில், சூழல் சுற்றுலா முகாமைத்துவத்தில், வனவிலங்குப் பராமரிப்பில் பயன்படுத்தி பொருளாதார நன்மைகளையும் ஈட்டக்கூடியதாய் மாற்றலாம். இப் பல்கலைக்கழகம் வன்னி மக்களையும் மற்றைய இலங்கையர்களையும் இத்துறைகளில் பயிற்றுவிக்கலாம்.
 
இந்தப் பல்கலைக்கழகத் தேவையானது இந்தப் பிராந்தியத்திலுள்ள பாராளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக சகல நலன் விரும்பிகளின் ஆதரவையும் பெற்றிருக்கின்றது. 2016 செப்ரெம்பர் 22 ஆம் திகதி கூடியபாராளுமன்றத்தில் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டவிவாதம் இடம்பெற்றபோது மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராகிய திரு. என். சிவசக்திஆனந்தன் அவர்கள் இந்த வன்னிப் பல்கலைக்கழக உதயம் பற்றிய விடையத்தை எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் முகமாக மதிப்புக்குரிய உயர் கல்விஅமைச்சராகிய திரு. லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டு வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக மாறும் என்று அறிவித்தார். 
 
அதன் பின்பு பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவின் தலைவராகிய பேராசிரியர் மோகன் டி சில்வாஅவர்கள் இதில் தனது தீவிர ஈடுபாட்டை காட்டி தனது விருப்பத்தை வவுனியாவளாகத்திற்குப் பலமுறை தெரிவித்திருந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணசபையின் 85 ஆவது அமர்வில் வன்னிப் பல்கலைக்கழகத்துக்கான ஆதரவை ஏகமனதான தீர்மானமாகவே நிறைவேற்றி மாண்புமிகு உயர் கல்வி அமைச்சருக்கும், மதிப்புக்குரிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதனை அனுப்புவதாக அறிவித்தது.
 
ஆகையால் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்கான உங்கள் ஆதரவையும் அதற்கான உங்களின்செயற்பாட்டினையும் பணிவுடன் வேண்டி நிற்கிறோம். நாங்களெல்லாம் இலங்கையின் புறப்பகுதிகளில் வாழ்கின்ற மனிதர்கள் என்ற அடிப்படையில் இதை புரிந்து கொள்ளவேண்டும் என்பது தான். இலங்கையின் மையப்பகுதியாக இருக்கும் மேல் மாகாணம்தவிர்ந்த மற்றைய மாகாணங்களின் வளர்ச்சி சமத்துவத்தை எட்டக்கூடியதாய் இருக்கவேண்டும். ஆகவே மதிப்புக்குரிய இலங்கையின் ஜனாதிபதி அவர்களே எமது இந்தப்பணிவான ஆனால் பயன்தரக்கூடிய வேண்டுதலை ஏற்றுக்கொள்ளுமாறும், அதன் அடிப்படையில், ஒரு தீர்மானத்தை எடுத்து, வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக அமுல்படுத்துமாறு வேண்டிநிற்கிறோம்.
 
என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 

Add new comment

Or log in with...