Thursday, April 18, 2024
Home » விழிப்புணர்வு மூலம் பாடசாலை மாணவர்களிடையே போதைப் பாவானையை எதிர்த்துப் போராடுவதை தூண்டும் John Keells Foundation

விழிப்புணர்வு மூலம் பாடசாலை மாணவர்களிடையே போதைப் பாவானையை எதிர்த்துப் போராடுவதை தூண்டும் John Keells Foundation

by Rizwan Segu Mohideen
September 21, 2023 11:39 am 0 comment

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையில் அபாயகரமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது 11 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் போதைப்பொருள் பாவனையை பரிசோதித்து பார்த்தல் மிகவும் கவலையளிக்கும் போக்கு ஆகும் என இலங்கை போதைப்பொருள் எதிர்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

அதிக போதைப்பொருள் பாவனையாளர்கள் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளார்கள். முக்கியமாக, பாடசாலை சிறார்களை குறிவைக்கும் பொருட்கள், இனிப்புகள் மற்றும் உபசரிப்புகளுடன் கூடிய மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளாகும். அவை கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களால் விற்கப்படுகின்றன. இந்த வஞ்சகமான அணுகுமுறை, சிறு வயதிலேயே சிறுவர்களை மென்மையான போதைப்பொருளுக்குள் இழுத்து, அதன் மூலம் ஐஸ் மற்றும் ஹெரொயின் போன்ற கடினமான போதைப்பொருட்களுக்கான தேவைக்கான நெகிழ்வை பிற்காலத்தில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நெருக்கடியான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கியமான தேவையை உணர்ந்து, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஃபவுன்டேஷன் (ஜேகேஎஃ), 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் போதைப்பொருள் பாவானை தடுப்பு விழிப்புணர்வு திட்டத்தில் தீவிரமாக முன்னணியில் உள்ளது. பாடசாலை செல்லும் சிறார்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடுவது, அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தை சிக்கல்களைத் தடுப்பது என நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, ஜேகேஎஃ சமீபத்தில் ஜா-எலவில் உள்ள அதன் பிரஜா சக்தி இடஅமைவில் பாடசாலை அடிப்படையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் (என்டிடிசிபி) இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, நேர்மறையான பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் மூலம் போதைப்பொருள் பாவனை மற்றும் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதில் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வலுவூட்டும் நோக்கத்துடன் வெற்றிகரமாக நடைபெற்றது. ஜூன் 28 ஆம் திகதி, பிராந்தியத்தில் உள்ள ஐந்து வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 71 மாணவர்கள், போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதை பழக்கத்தைத் தணிப்பதற்கான உத்திகளைக் கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் பாவானையின் கடுமையான ஆபத்துகளை முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினர்.  ஜேகேஎஃ இன் முன்முயற்சியின் முதன்மை நோக்கம், போதைப்பொருள் பாவானையால் ஏற்படும் அபாயங்கள் குறித்து இளைஞர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் போதைப்பொருள் இல்லாத மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதாகும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன், ஜேகேஎப்., 15 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டியை நடத்தியது. விழிப்புணர்வு அமர்வின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிவைப் பற்றிய மாணவர்களின் புரிந்துகொள்ளுதலை  மதிப்பிடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த ஆக்கப் பயிற்சி அமைந்தது. என்டிடிசிபி இன் சமீபத்திய அறிக்கைகளின்படி, அதிக போதைப்பொருள் பாவனையைக் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டதன் காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான இடமாக, ஜா-எல தேர்ந்தெடுக்கப்பட்டது.

சர்வதேச நினைவு தினத்தின் ஒரு பகுதியாக, இளம் வயதினரின் பெற்றோரை இலக்கு வைத்து, ” போதை வஸ்துகளுக்கு எதிராக ஒன்றாக” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தையும் ஜேகேஎப் தொடங்கியது.

 சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவானையைத் தணிப்பதற்கான ஜேகேஎப் இன் அர்ப்பணிப்பு இந்த நிகழ்விற்கு அப்பாலும் விரிவாக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் போதைப்பொருள் பாவானை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆரோக்கியத்தின் மையப் பகுதியின் கீழ், ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி அமைந்துள்ள இடங்களான கொழும்பு 2, ஹிக்கடுவை மற்றும் ஜா-எல வில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள்,  முன்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அரசாங்க அலுவலர்களுக்கான இலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கொழும்பு 2 இல் சமூக விழிப்புணர்வையும் ஒவ்வொரு வருடமும், தீவிரமாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், போதைப்பொருள் பாவானையின் ஆபத்துகள், கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் கிடைக்கக்கூடிய உதவி மற்றும் ஆதரவு சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சமூக ஊடக பிரச்சாரம் பொருத்தமான கருப்பொருளின் கீழ் இயக்கப்படுகிறது. இதுவரை, 29,098 தனிநபர்கள் இந்த செயல்திறனுடைய முயற்சிகள் மூலம் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.

இலங்கையின் இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முயற்சித்து, சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக போராடுவதில் ஜோன் கீல்ஸ் ஃபவுன்டேஷன்  உறுதியாக உள்ளது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான  பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையின்  ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையூம் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT