புகையிரதம் தடம் விலகல்; வடக்கு ரயில் சேவை ஸ்தம்பிதம் | தினகரன்

புகையிரதம் தடம் விலகல்; வடக்கு ரயில் சேவை ஸ்தம்பிதம்

 
எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று தடம் விலகியதால் வடக்கு நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
குறித்த புகையிரதம் இன்று (26) அதிகாலை தண்டவாளம் விலகியதால் வடக்கு ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
 
தம்புத்தேகம, செனரத்கம பிரதேசத்திலேயே குறித்த ரயில், பாதையை விட்டு விலகியுள்ளதாக ரயில் நிலைய கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
 
நிலைமையை சீராக்கும் பணியில் புகையிரத பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
 

Add new comment

Or log in with...