விஜய் சேதுபதி, மாதவனின் - 'விக்ரம் வேதா' - Teaser | தினகரன்

விஜய் சேதுபதி, மாதவனின் - 'விக்ரம் வேதா' - Teaser

 
விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள படமே 'விக்ரம் வேதா' 
 
இப்படத்தின் டீசரை Y Not Studios நேற்று (23) வெளியிட்டுள்ளது. (இது வரை 7 இலட்சம் பேர் இதனை பார்வையிட்டுள்ளனர்.
 
படத்தின் பெயருக்கு அமைய, இருவரது பெயர்களும் இணைக்கப்பட்டதாக இத்திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதா என எண்ணத் தோன்றுகின்றது.
 
ஓரம் போ, வா ஆகிய படங்களுக்கு பின்னர், புஷ்கர் காயத்திரி ஆகிய இரு இணை இயக்குனர்களின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம்
 
 
அழுத்தமான கதை ஒன்றைக் கொண்டுள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ள இந்த திரப்படத்தின் டீசரில், விசாரணை நடைபெறுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
 
இருவரும் எப்போதும் கையில் துப்பாக்கியுடன் வலம் வருகின்றனர். மாதவன் பொலிஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி துறைமுகம் சம்மந்தமான தொழிலில் ஈடுபடும் தாதா போன்றும் காட்டப்படுகின்றது.
 
 
கையில் அரிவாள், உடையில் இரத்தக் கறை என பல்வேறு திருப்பங்களைக் கொண்டுள்ளதாக படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
நடிகர்கள்: விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், வரலட்சுமி
இயக்குனர்(கள்): புஷ்கர் - காயத்ரி
இசை: ஜி.வி. பிரகாஷ்
வெளியீடு: மே 05, 2017
 
 
 

Add new comment

Or log in with...