கட்டுகுருந்த படகோட்டிக்கு 06 வரை விளக்கமறியல் (UPDATE) | தினகரன்


கட்டுகுருந்த படகோட்டிக்கு 06 வரை விளக்கமறியல் (UPDATE)

 
கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் மார்ச் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, களுத்துறை பதில் நீதவான் சியாமளி யாப்பா இவ்வுத்தரவை வழங்கினார்.
 

16 பேர் பலியான விபத்து; 24 வயது நபர் கைது

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற கட்டுகுருந்த படகு விபத்தின்போது, படகை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 24 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
24 வயதான குறித்த சந்தேகநபரை, பேருவளை துறைமுககத்தில் வைத்து நேற்று (23) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
போகொல்ல, பேருவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, புஞ்சிஹேவகேக தினேஷ் ருவன் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதோடு, குறித்த சந்தேகநபரை இன்று (24) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Add new comment

Or log in with...