விமலுக்கு மார்ச் 03 வரை விளக்கமறியல் | தினகரன்

விமலுக்கு மார்ச் 03 வரை விளக்கமறியல்

 

முன்னாள் பிரதி பொது முகாமையாளர் பிணைணயில் விடுவிப்பு

 
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
பொதுச் சொத்து முறைகேடு தொடர்பான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு, எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (20) குறித்த விடயம் தொடர்பில் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
 
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், அவருடன் கைதான அரச பொறியியலாளர் சங்கத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளரான சமந்த லொகுஹென்னதிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சந்தேகநபர், தனது குழந்தையின் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரப்பட்ட பிணையின் அடிப்படையில், ரூபா 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விமல் வீரவங்ச கடந்த ஜனவரி 10 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID) கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...