64 வயது ஸ்பெயின் பெண் இரட்டை குழந்தை பிரசவம் | தினகரன்

64 வயது ஸ்பெயின் பெண் இரட்டை குழந்தை பிரசவம்

 

ஸ்பெயினில் 64 வயது பெண் ஒருவர் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளன.

ரிகொலெடஸ் மருத்துவமனையில் இவ்வாறான அரிதான சந்தர்ப்பங்களில் கையாளப்படும் சத்திரசிகிச்சை முறையில் இரட்டை குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிடாத அந்த பெண் கருவுறுவதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர் என்று ஸ்பெயின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது பிரசவ வீடியோ ஒன்று மருத்துவமனையால் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அண்மைய ஆண்டுகளில் தனது 60 வயதுகளில் இருக்கும் இரு ஸ்பெயின் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2016 ஏப்ரல் மாதத்தில் தனது 70 வயதுகளில் இருக்கும் இந்திய மூதாட்டி தல்ஜின்தர் கவுர் குழந்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...