அதிக செலவு: தேர்தலை நிறுத்த கொங்கோ முடிவு | தினகரன்

அதிக செலவு: தேர்தலை நிறுத்த கொங்கோ முடிவு

 

கொங்கோ ஜனநாயக குடியரசில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அதிக செலவு கொண்டது என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால் ஒப்பந்தத்தின் படி, இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்த 1.8 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக அந்நாட்டு வரவு செலவு திட்ட அமைச்சர் பிர்ரே கன்குடியா குறிப்பிட்டுள்ளார். எனினும் 2017 ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசு மற்றும் எதிர்க்கட்சி கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன.

ஜனாதிபதி ஜொசப் கபிலாவின் பதவிக்காலம் 2016 நவம்பரில் முடிவடைந்தது.

அவர் ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்கே தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் கொங்கோ நாட்டில் தேர்தல்கள் கடந்த காலங்களில் சர்ச்சை கொண்டதாகவே இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் குறைந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.

55 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் பெற்றது தொடக்கம் கொங்கோவில் அமைதியான ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்றதில்லை. 


Add new comment

Or log in with...