ரஞ்ஜன் மடுகல்ல முதல்விருதை வென்றது சிறப்பான ஆரம்பம் | தினகரன்

ரஞ்ஜன் மடுகல்ல முதல்விருதை வென்றது சிறப்பான ஆரம்பம்

 

இலங்கையின் முதல்தர பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸ் தொடர்ந்து 39 வது வருடமாக இந்த வருடத்திற்கான ஒப்சேவர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் சுற்றுப் பொட்டிக்கு அனுசரணை வழங்குகின்றது.

பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் 'டெய்லி நியூஸும்' அதன் சகோதரப் பத்திரிகையன 'சண்டே ஒப்சேவருமே' முன்னணியில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு இடைப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு சுற்றுப் போட்டி எதுவும் நடைபெறாதிருந்த ஒரு காலகட்டத்திலேயே 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகை செயலில் இறங்கியது. அந்த வகையில் இளம் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான முதல் சுற்றுப் போட்டியில் ரீட் அவென்யூ இளம் கிரிக்கெட் வீரர்கள் அணியின் தலைவர் ரஞ்ஜன் மடுகல்ல சென். தோமஸ் கல்லூரிக்கு எதிராக தனது அணியை வழிநடத்தினார். அந்தப் பொட்டியின் முடிவில் ரஞ்ஜன் மடுகல்ல முதலாவது சிறந்த இளம் பாடசாலை கிரிக்கெட் வீரராக முடிசூட்டப்பட்டார்.

அன்று முதல் இடம்பெற்று வரும் பாடசாலை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான சுற்றுப் போட்டி பல சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்கியிருக்கிறது. அதில் இலங்கைக்கு முதன் முறையாக உலக கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன், சனத் ஜயசூரிய ஆகியோரைக் குறிப்பிடலாம்.

உலகின் முதல்தர கிரிக்கெட் வீரர்களாக இவர்களின் சாதனைகளை கிரிக்கெட் உலகம் இன்றும் பெருமையோடு நினைவு கூருகிறது. 1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அர்ஜுன ரணதுங்கவின் அணியில் அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, மார்வன் அத்தபத்து ஏனைய வீரர்களாவர்.

இந்த வருடமும் வழமைபோல் 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகை ஊடாக அனுசரணையுடன் போட்டிகளை நடத்தும். உடன் அனுசரணையை ஸ்ரீலங்கா டெலிகொம் - மொபிடெல் இணைந்து வழங்கும். 


Add new comment

Or log in with...