ஐ.பி.எல் அட்டவணை வெளியீடு | தினகரன்

ஐ.பி.எல் அட்டவணை வெளியீடு

 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) டி20 தொடரின் 2017ஆம் ஆண்டு தொடரின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன.

ஏப்ரல் 5ஆம் திகதி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நடக்கும் ஆரம்ப லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத், கடந்த ஆண்டு 2ஆவது இடம் பிடித்த ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை எதிர்கொள்கிறது. 10 மைதானங்களில் 47 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளன.

இறுதிப் போட்டி ஐதராபாத்தில் மே 21ஆம் திகதி நடைபெறும். வரும் 20ஆம் திகதி நடக்கும் வீரர்கள் ஏலத்தில் 122 சர்வதேச வீரர்கள் உட்பட 351 பேர் இடம்பெற்றுள்ளனர். 


Add new comment

Or log in with...