கைதான மாணவர்கள் பிணையில் விடுதலை | தினகரன்

கைதான மாணவர்கள் பிணையில் விடுதலை

 
கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் நேற்று (15) இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைதான 15 மாணவர்களில் 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
மருதானை பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்ட 10 பேரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த 10 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட ஒரு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
பொரளை பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஏனைய 5 பேரும் இன்று (16) அலுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இம்மோதல் சம்பவத்தில் 08 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, இதன்போது, இ.போ.ச. பஸ் ஒன்று, தனியார் பஸ் ஒன்று, இரு வேன்கள் மற்றும் கார் ஒன்றும் சேதத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...