முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி | தினகரன்

முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இன்று (17) இடம்பெற்ற இருபதுக்கு ரி20 போட்டியில், இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
 
மெல்பர்னில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் அவுஸ்திரேலியா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
 
அதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலிய அணி, 168 ஓட்டங்களை பெற்றது.
 
 
ஆரோன் பின்ச் 43
மைக்கல் கிளிங்கர் 38
 
லசித் மாலிங்க 2/29
 
169 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை  அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
 
இலங்கை அணி சார்பில் 
 
 
அசேல குணரட்ன 52
டில்சான் முனவீர 44 
நிரோசன் திக்வெல்ல 30
 
போட்டியின் இறுதி ஓவர் வரை விறுவிறுப்பாகச் சென்ற குறித்த போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் 52 ஓட்டங்களைப் பெற்ற அசேல குணரட்ன தெரிவு செய்யப்பட்டார்.
 
அதன் அடிப்படையில், மூன்று போட்டிகளை கொண்ட குறித்த தொடரில் 1 - 0 எனும் வகையில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
 
2 ஆவது ரி20 போட்டி நாளை மறுதினம் (19) கீலொங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...