கெட்டுப்போன பால் ஆற்றில் கலப்பு? உரிமையாளர் கைது

 
கெட்டுப்போன பாலைஆற்றில் கலந்த குற்றச்சாட்டுக்காக குறித்த பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் ஒருவரை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
 
டிக்கோயா பகுதியில் இயங்கி வரும் தனியார் பால் சேகரிப்பு நிலையம் ஒன்றின் உரிமையாளரான சந்தேகநபரை 
இன்று (17) காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
பால் சேகரிப்பு தாங்கியில் கசிவு ஏற்பட்டுள்ளதாலேயே இவ்வாறு பால் கசிவுக்குள்ளாகியுள்ளதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற இந்த பால் சேகரிப்பு நிலையத்திற்கு, இப்பகுதியை சேர்ந்த தோட்டப்பகுதி மற்றும் கிராம பகுதி மக்கள் பசும்பால் வழங்கி வருகின்றனர்.
 
 
இன்று (17) காலை பால் சேகரிப்பு நிலையத்திலிருந்து அதற்கு அருகில் ஓடும் டிக்கோயா ஆற்றில் அதிகளவான பால்,  கலக்கப்பட்டுள்ளதாக குறித்து மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
 
அதேவேளை இவ்வாறாக பால் நீருடன் கலக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
 
சம்பவத்தை அறிவதற்காக விரைந்த அட்டன் பொலிஸார் பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பால் சேகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்பட்ட பால் தாங்கி ஒன்றில் இருந்து கசிவு ஏற்பட்டு பால் வெளியாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
 
சுமார் 2,000 லீற்றர் பால் இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சந்தேகம் கொண்ட பொலிஸார் உரிமையாளரை கைது செய்துள்ளனர். 
அதேவேளை பால் சேகரிப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் மாத்திரமே கடமையில் இருந்ததாக உரிமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இருந்தும் கெட்டுப்போன பாலை, உரிமையாளர் ஆற்றில் கலக்குவதற்கு முயற்சித்திருக்கலாம் எனு சந்தேகத்தின் பேரிலேயே அவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை `ட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(ஹட்டன் சுழற்சி, விசேட நிருபர்கள்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...