சசிகலாவுக்கு ஐதராபாத் மாநகராட்சி நோட்டீஸ் 2 ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை என புகார் | தினகரன்

சசிகலாவுக்கு ஐதராபாத் மாநகராட்சி நோட்டீஸ் 2 ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை என புகார்

 

2 ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தாததால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஐதராபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 1990-ம் ஆண்டில் ஐதராபாத்தின் புறநகரான ஜி.டி.மெட்ரோ என்ற இடத்தில் திராட்சை தோட்டத்தை வாங்கினார். இதற்கு ஜெ.ஜெ. கார்டன்ஸ் என பெயரிடப்பட்டது. அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்காக ஜெயலலிதா அங்கு செல்வது வழக்கம்.

இதுபோல சிக்கந்தராபாத் மறெத்பள்ளி என்ற இடத்தில் ராதா கொலனியில் உள்ள ஒரு வீடு சசிகலா பெயரில் வாங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வீடு பூட்டியே காணப்படுகிறது. அதே நேரம் வீட்டு வரி ரூ.35,424 செலுத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக ஐதராபாத் மாநகராட்சி சார்பில் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வரி நிலுவையை உடனே செலுத்த வேண்டும் என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...