சிறையில் ஒரே அறையில் சசிகலா, இளவரசி | தினகரன்

சிறையில் ஒரே அறையில் சசிகலா, இளவரசி

 

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முதல் நாளில் தரையில் படுத்து தூங்கினார். சிறையில் பெண் கைதிகளுக்கான புளொக் எண் 2 அறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுடன் இளவரசியும் உள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி கட்டில் வேண்டும் என சசிகலா வைத்த கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு அவர் தரையில் படுத்து தூங்கினார். இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் இதே நிலைதான். சசிகலாவின் கைதி எண் 9234, இளவரசிக்கு 9235 மற்றும் சுதாகரனுக்கு 9236 எண்கள் அடுத்தடுத்து வழங்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு 2 சப்பாத்தி, ஒரு கப் சாதம், சாம்பார், 200 மி.லி மோர் வழங்கப்பட்டன. மூவருக்கும் தலா 1 போர்வை, தலையணை, தட்டு, டம்ளர், பக்கெட், மக்கு, டேபிள் கூலர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார குற்றம் புரிந்தால் சாதாரண தண்டனை கைதியாகவே இவர்கள் கருதப்படுவார்கள்.

அதனால் இவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் வெள்ளை ஆடைக்கு பாதிலாக விட்டிலிருந்து கொண்டுவரக்கூடிய 3 சேலை எடுத்துக்கொள்ளலாம். சிறையில் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் சிறை நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...