ஆறு இலங்கையருக்கு துபாயில் சிறைத் தண்டனை | தினகரன்

ஆறு இலங்கையருக்கு துபாயில் சிறைத் தண்டனை

 

துபாயில் இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களை பயன்படுத்தியமை, நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அந்த நாட்டு நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் சாரதியாக அங்கு பணியாற்றியுள்ளதாகவும், ஏனையவர்கள் வேலையில்லாது இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 எவ்வாறாயினும் குறித்த இலங்கையர்களில் நான்கு பேர் விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட போது அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை காலம் நிறைவடைந்தபின்னர் குறித்த ஆறு பேரையும் நாடு கடத்துமாறும் துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


There is 1 Comment

i am oluvil south university final year student ......i wont thinakaran old publication information so pls help sir or medam.. 0772929005

Pages

Add new comment

Or log in with...