பாடசாலை மாணவர்கள் மோதல்; 6 பேர் வைத்தியசாலையில்

Rizwan Segu Mohideen
வைப்பக படம்
 
கொழும்பின் பிரதான பாடசாலைகளான ஆனந்தா கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரி, மாணவர்களுக்கிடையில் இன்று (15) பிற்பகல் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
 
குறித்த மாணவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆனந்த கல்லூரியின் இருவரும், நாலந்த கல்லூரியின் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதில் 15 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், கொழும்பு டி.எஸ் சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
9 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...